Published : 12 Jun 2023 02:05 PM
Last Updated : 12 Jun 2023 02:05 PM
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11-ல் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சச்சின், ரவி சாஸ்த்ரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனைச் செய்யவில்லை.
இருப்பினும் சில நல்ல தருணங்கள் இந்திய அணிக்கு கிடைத்தன. ஆனால், பிளேயிங் 11-ல் டெஸ்ட் போட்டியில் முதன்மை பந்துவீச்சாளாராக இருக்கும் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. போட்டிக்கு முன்னரே நான் கூறியதுபோல், திறனுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் மைதானத்தின் தன்மைக்கேற்ப தங்களது பந்துவீச்சை சிறப்பாக செய்வார்கள். நீங்கள் மறக்கக் கூடாது. ஆஸ்திரேலியாவின் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடது கை ஆட்டக்காரர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations to Team Australia on winning the #WTCFinal. @stevesmith49 and @travishead34 set a solid foundation on Day one itself to tilt the game in their favour. India had to bat big in the first innings to stay in the game, but they couldn’t. There were some good moments…
— Sachin Tendulkar (@sachin_rt) June 11, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...