

சென்னை: சென்னையில் இன்று முதல் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கான தொடக்க விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டிகள் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளன. போட்டி தொடக்க விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
போட்டியை தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.
முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.