Published : 11 Jun 2023 11:32 AM
Last Updated : 11 Jun 2023 11:32 AM
ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4ம் நாள் ஆட்டமான நேற்று காலையில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் 2வது இன்னிங்ஸில் அடித்து அவுட் ஆன ஷாட்டை ‘மிக மோசமான ஷாட்’ என்று அவரிடமே கூறியதை வர்ணனையாளர் ஜஸ்டின் லாங்கர் ஒட்டுக் கேட்டு அதை வெளிப்படுத்தினார்.
4ம் நாள் ஆட்டம் முடிவில் ஷுப்மன் கில் கேட்ச் சர்ச்சையால் அவரை ‘ஏமாற்றுக்காரா’ என்று இந்திய ரசிகர்கள் ஏசினர். இதனிடையில் ‘மேஜிக் கணம்’ என்று ஜஸ்டின் லாங்கர் கூறியது கோலி-ஸ்மித் இடையே நடந்த சம்பாஷணையைத்தான்.
சேனல் 7-ல் வர்ணனை செய்து கொண்டிருந்த ஜஸ்டின் லாங்கர் இரு ஜாம்பவான்களுக்கு இடையே நடந்ததாலும் இருவரும் நண்பர்கள் என்பதாலும் இது பெரிய விஷயமாகவில்லை என்கிறார்.
அதாவது விராட் கோலி, ஸ்மித்திடம் சென்று, ‘நேற்று நீங்கள் ஆடியது மோசமான ஷாட்’ என்றார். ஸ்டீவ் ஸ்மித் கோலி கூறியதால் அதை ஏற்றுக் கொண்டு வெறுமனே கோலியைப் பார்த்தார்.
லாங்கர் இதை வர்ணனையில் கூறும்போது, “கோலி சொன்னதால் பிரச்சனையில்லை, இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் வேறு மாதிரி ஏதாவது நடந்திருக்கும்” என்றார். “ஆனால் இது இரு ஜாம்பவான்களுக்கு இடையே நடந்த உரையாடல் என்னும் மேஜிக் மொமண்ட் என்று வர்ணிக்கிறார் ஜஸ்டின் லாங்கர்.
பிறகு ஸ்டீவ் ஸ்மித்த்தும், ‘ஆம் அது மோசமான ஷாட் என்பது சரிதான்’ என்று விராட் கோலியின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு ஜீனியஸ் இன்னொரு ஜீனியஸிடம் கூறியதால் இது சர்ச்சையாகவில்லை அதனால்தான் இது மேஜிக் கணம் என்று வர்ணிக்கப்படுகின்றது.
ஸ்டீவ் ஸ்மித் பால் டேம்பரிங் சர்ச்ச்சையில் சிக்கி அதன் விளைவாக 2019 உலகக்கோப்பையில் அவரை ‘ஏமாற்றுக்காரா’ என்று ரசிகர்களில் ஒரு கோஷ்டியினர் கத்திய போது ஸ்டீவ் ஸ்மித்தின் கையைத் தூக்கிக் காட்டி ஏன் இப்படி அசிங்கமாக நடந்து கொள்கிறீர்கள் என்ற ரீதியில் ரசிகர்களையே கண்டித்தவர் அப்போதைய கேப்டன் விராட் கோலி.
ஸ்டீவ் ஸ்மித்திற்கு இவ்வாறு நடந்தது கோலிக்கு பிடிக்கவில்லை என்பது இன்னொரு தருணத்திலும் அவரிடமிருந்து வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடரில் ஸ்டம்ப் மைக்கில் போய் பேசி கோலி சர்ச்சையில் சிக்கினார், அப்போதும் கோலி ஒளிபரப்பாளரை கடிந்து கொள்ளும் போது எதிரணியை காமிரா மூலம் உற்றுப் பார்க்கும் நீங்கள் உங்கள் அணி, உங்கள் நடுவர் செய்வதைப் பாருங்கள் என்பது போன்ற ஒன்றைக் கூறியதாக செய்திகள் அப்போது வெளியாகின. ஏன் டிவி ஒளிபரப்பாளரை கோலி கடிந்தார் என்றால், ஆஸ்திரேலிய அணியின் வார்னர், ஸ்மித் மீது எழுந்த பால் டேம்பரிங் விவகாரத்திற்கு அதனையொட்டி இந்த வீரர்களுக்கு எழுந்த அவமானத்திற்கும் தென் ஆப்பிரிக்க டிவி ஒளிபரப்பாளர்களே காரணம் என்பதுதான். ஆகவே கிரிக்கெட் ஆட்டத்தில் பகைமை இருந்தாலும் இது போன்ற நட்பார்ந்த இளகிய கணங்கள்தான் அதனை இன்று வரை காப்பாற்றி வருகின்றது என்பதற்கு கோலி-ஸ்மித் இந்த சம்பாஷணை ஒரு எளிய உதாரணமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment