Published : 07 Jun 2023 03:38 PM
Last Updated : 07 Jun 2023 03:38 PM
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டி அவர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய ரோஹித் ஷர்மாவிடம் தொகுப்பாளர், ‘அஸ்வினை ஆட்டத்தில் எடுக்காதது கடினமானதாக இருக்குமா?’ என கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த ரோஹித், “அஸ்வின் விளையாடப் போவதில்லை என நான் எங்கும் சொல்லவில்லை. நாளை வரை காத்திருப்போம்.
ஏனென்றால் நான் இங்கிருக்கும் பிட்ச்-ஐ கவனித்தேன். அதன் தன்மை நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிருக்கிறது. இன்றைக்கு இப்படியிருக்கும் இந்த பிட்ச் நாளை கொஞ்சம் மாறலாம். யாருக்கு தெரியும். ஆக, வீரர்களுக்கு ஒன்றை மட்டும் நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். 15 பேரும் எந்த நேரத்திலும் விளையாடத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
மேட்ச் அப்டேட்: இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இதில் உஸ்மான் காவாஜா ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே, டேவிட் வார்னருடன் கைகோத்து விளையாடி வருகின்றார். 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா 18 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது.
பிளேயில் லெவனில் அஸ்வின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT