Last Updated : 07 Oct, 2017 12:03 PM

 

Published : 07 Oct 2017 12:03 PM
Last Updated : 07 Oct 2017 12:03 PM

2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்

அல்பேனியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.

ஸ்பெயின் அணியில் ரோட்ரிகோ (16வது நிமிடம்), இஸ்கோ (23), தியாகோ (26) ஆகியோர் முதல் பாதியிலேயே கோல்களை அடித்து முடித்தனர். இதனால் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் ஸ்பெயின் வென்று ஜி குரூப்பிலிருந்து உலகக்கோப்பைத் தகுதியை உறுதி செய்துள்ளது.

இத்தாலி அணி மேசிடோனியா அணிக்கு எதிராக டிரா செய்தது.

ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் இஸ்கோவின் பாஸை தன் நெஞ்சில் வாங்கி கட்டுப்படுத்திய ரோட்ரிகோ பிறகு இடது காலால் அருமையாக உதைக்க அல்பேனியா கோல் கீப்பர் எட்ரிட் பெரிஷாவைத் தாண்டி கோலாக ஆனது.

இதனையடுத்து 24-வது நிமிடத்தில் இஸ்கோ ஒரு சக்தி வாய்ந்த ஷாட்டில் 2-வது கோலை அடிக்க 4 நிமிடங்கள் கழித்து தியாகோ 3-வது கோலை அடித்தார்.

அறிமுக ஸ்பெயின் வீரர் அல்வாரோ ஓட்ரியோசோலா வலது புறம் அருமையாக ஆடி பிறகு ஒரு பந்தை தூக்கி அருமையாக பாஸ் செய்ய தியாகோ தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார், மிக அருமையான கோலாக இது அமைந்தது.

மேலும் சில கோல்களையும் ஸ்பெயின் அடிக்க வாய்ப்பு ஏற்பட்டது, அந்த ஒன்றிரண்டை அல்பேனிய கோல் கீப்பர் தடுத்தார்.

ஸ்பெயின் அணி உலகக்கோப்பைக் கால்பந்துக்கு தகுதி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x