Published : 30 Oct 2017 12:11 PM
Last Updated : 30 Oct 2017 12:11 PM
ஐப்பசி சதயத் திருநாளான, ராஜராஜ சோழன் பிறந்த நாள் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில் கொண்டாடப்படுகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1032 வது பிறந்த நாள் 30-10-2017 இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில், நம்பியாண்டார் நம்பிகள் உதவியாலும், ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அருளாலும் சிதம்பரத்தில் இருந்த திருமுறைகளை மாமன்னன் ராஜராஜ சோழப் பெருவுடையார், கண்டெடுத்தான் என்பது வரலாறு. அப்படிதிருமுறைகளைக் கண்டெடுத்ததால், ராஜ ராஜ சோழனுக்கு திருமுறை கண்ட சோழன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தது சோழதேசம்.
அப்படி திருமுறை கண்ட சோழனுக்கு தஞ்சையில் பெரிய கோயிலை கட்டியபோது, கோயில் உள்ளே அவனுடைய திருஉருவச்சிலை அமையவில்லை (ஏனென்றால் அப்போது அரசன் மட்டும் தான் ) அங்கே கோயில் முகப்பில் நந்தவனத்தில் தான் சிலை நிறுவப்பட்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் திருநாரையூரில் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார் சந்நிதியில் நம்பியாண்டார் நம்பிகளின் அருகில் ராஜராஜ சோழனுக்கு திருவுருவச் சிலை நிறுவி இன்றும் தொடர்ந்து பிறந்த விழா கொண்டாடப்பட்டு வருவது, எந்தத் தலத்திலும் இல்லாத சிறப்பு.
இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இந்த விழா திருநாரையூர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில், சிவனடியார்கள் முன்னிலையில் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான ட்ரஸ்ட் நிறுவனரும் செயலாளருமான வெங்கடேச தீக்ஷிதர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளை விசேஷ பூஜைகள் செய்து கொண்டாடினார்கள்.
உலகத்தில் தமிழ் மொழி எவ்வளவு முக்கியமோ அதற்கு துணை திருமுறைகள், ஆன்மிகம் கலக்காத தமிழ் சிறப்புடையது அல்ல என்பதை நிலை நிறுத்தும் வண்ணம் ராஜ ராஜ சோழன் திருவுருவச்சிலை போற்றப் படுகிறது என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீக்ஷிதர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT