Last Updated : 23 Oct, 2017 10:41 AM

 

Published : 23 Oct 2017 10:41 AM
Last Updated : 23 Oct 2017 10:41 AM

இன்று நாக சதுர்த்தி... விநாயகரை வழிபடுங்கள்!

வாரத்தின் வேலை நாள் துவக்கம் இன்று. அதேபோல், முழுமுதற்கடவுளெனப் போற்றப்படும் ஸ்ரீவிநாயகருக்கும் உகந்த நாள். இன்றைய தினம் நாக சதுர்த்தி ஆராதிக்கப்படுகிறது.

நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உகந்த விஷயமாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. என்றாலும் இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்!

ஆடி மாதத்தில் வருகிற நாக பஞ்சமியும் நாக சதுர்த்தியும் விசேஷமானவை. ஆனாலும் ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவது இன்னும் இன்னுமான பலன்களைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த நாளில் வழிபட்டால் வளம் பெறலாம் என்பது உறுதி.!

நாகத்தையே பூணூலாக அணிந்து கொண்டிருக்கும் விநாயகப்பெருமானே! உனக்கு நமஸ்காரம் என்கிறது விநாயக அஷ்டோத்திரம்.

பல வகையான ஒளியின் பிரகாசங்களும் சேருகிற திருநாளே தீபாவளி. அதாவது பல வகை ஒளிப் பிரகாசச் சக்திகள் பூலோகமெங்கும் ஒளி, ஒலி வடிவில் தோன்றுகிற வலிமைமிக்க திருநாள்.

இவ்வாறாக தீபாவளியின் எண்ணற்ற ஒளி மகாத்மியங்கள் உள்ளன.

பராசக்தி, இறைவனின் திருக்கண்களை மூடிய போது, ஏற்படுத்திய கண் இமைக்கும் நேர இருளுக்குப் பிராயச் சித்தமாக, கோடிக் கணக்கான தீபங்களை உலகெங்கும் ஏற்றி, தீபப் பிரகாச சக்தி அளித்த ஒரு யுகத்தின் திருநாளுமே தீபாவளி ஆகும்.

மூன்று மஹா சிவராத்திரிகளுக்கு இடையே வருகிற, நான்கு வகையான மாத சிவராத்திரிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்கின்றன ஞானநூல்கள்.

 இவற்றுள் ஒன்றாக, ஐப்பசி மாத நாகச் சதுர்த்தசி நாளும் திகழ்கிறது!

இன்றைய தினம்... நாக சதுர்த்தசி. இந்த நாளில் அருகம்புல் சார்த்தி, கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வணங்கினால், ராகு கேது முதலான தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும். சங்கடங்கள் அனைத்தும் விலகும்! சந்தோஷங்கள் பெருகும்.

இந்த நாளில், லட்சுமி குபேர பூஜை செய்வதும் விசேஷம். அல்லது அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை வணங்கிப் பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபடுவதுடன், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று, நாகராஜரை முட்டை, பால் வைத்து வழிபட்டால், சர்ப்ப தோஷ நிவர்த்தி நிச்சயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x