Published : 03 May 2023 05:24 AM
Last Updated : 03 May 2023 05:24 AM
மதுரை: மதுரை அழகர்கோவில் சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் இன்று மதுரை புறப்படுகிறார். நாளை மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல்நாள் விழா மே 1-ல் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளலுடன் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். 3-ம் நாளான (மே 3) இன்றுமாலை 6 மணிக்கு மேல் அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு புறப்படுகிறார்.
4-ம் தேதி (நாளை) காலை 6மணியளவில் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வரவேற்கும் எதிர்சேவை நடைபெறும்.
மே 5-ம் தேதி அதிகாலை12 மணியளவில் தல்லாகுளம்பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தங்கி திருமஞ்சனமாகிறார். பின்னர் சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். தொடர்ந்து வில்லிபுத்தூர்ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சாற்றி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.
5-ம் தேதி வைகையில் இறங்குகிறார்: அதைத் தொடர்ந்து அதிகாலை3 மணியளவில் கருப்பணசாமிகோயிலில் உத்தரவு பெற்று ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்கிறார். அதிகாலை 5.45 மணிக்குமேல் 6.12 மணிக்குள் கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்குகிறார்.தொடர்ந்து 3 நாட்கள் மதுரையில் தங்கி பல்வேறு வைபவங்களில் பங்கேற்கும் கள்ளழகர், மே 8-ம்தேதி மதுரையிலிருந்து அழகர்மலைக்குத் திரும்புகிறார்.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாஜலம்,துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT