Published : 04 Apr 2023 07:10 PM
Last Updated : 04 Apr 2023 07:10 PM

திருமலையில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி ஊர்வலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருமலை: திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் வசந்த உத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரில் மலையப்ப சுவாமி ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தற்போது வசந்த உத்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்ப சுவாமி, தனது இரு தேவியருடன் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே தங்கத் தேர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஊர்வலத்தின் இறுதியாக சுவாமி, வசந்த மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மலையப்ப ஸ்வாமிக்கும் தயாருக்கும் அர்ச்சகர்கள் ஸ்னபன திருமஞ்சனம் செய்தனர். இதையடுத்து பாராயணம் செய்யப்பட்டது. இந்த சடங்குகளுக்குப் பிறகு மலையப்ப சுவாமியும், தாயாரும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x