Published : 04 Apr 2023 04:11 PM
Last Updated : 04 Apr 2023 04:11 PM

தஞ்சாவூரில் 1,000 ஆண்டு பழமையான பச்சைக் காளி, பவளக் காளி வீதியுலா புறப்பாடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோயில் உற்சவத்தையொட்டி பச்சைக் காளி, பவளக்காளி புறப்பாடு இன்று நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும்காளிகள் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த மாதம் 13-ம் தேதி, 21-ம் தேதி, 28-ம் தேதிகளில் காப்பு கட்டுதலும், நேற்று மாலை 6 மணிக்கு கோடியம்மன் கோயிலிலுள்ள 2 காளி உருவங்களையும் அதனை தூக்குபவர்களையும், திருநீறு நிரப்பிய 2 தனித்தனி கபாலத்துடன், மேலராஜவீதிக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இன்று அதிகாலை 2 மணிக்கு மேலராஜ வீதியுள்ள சங்கரநாராயணன் கோயிலிருந்து பச்சைக் காளியும், கொங்கணேஸ்வரர் கோயிலிருந்து பவளக் காளிகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு 2 காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து உறவாடுதலும், 6-ம் தேதி விடையாற்றியும், 7-ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 9-ம் தேதி காப்பு அவிழ்த்தலும், 11-ம் தேதி இரவு இருப்பிடத்தல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜிராஜாபான்ஸ்லே, உதவி ஆணையர் கோ.கவிதா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x