Published : 21 Sep 2017 10:50 AM
Last Updated : 21 Sep 2017 10:50 AM

அரங்கநாதர் பெருமாளுக்கு வழிவிட்ட காவிரித்தாய்

புரட்டாசி சனிக்கிழமைகள் அரங்கநாதனுக்கு கொண்டாட்டமானவை. கட்டாஞ்சி மலையில் வீற்றிருக்கும் தண்டிகை அரங்கநாத பெருமாளுக்கும் அப்படித்தான். ஆண்டு முழுவதும் ஆளரவமற்றிருக்கும் இந்த மலைக்குன்றுகளில் புரட்டாசி மாதம் இரண்டாம், ஐந்தாம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுகிறார்கள்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து மேற்கே செல்லும் கிராமத்துச் சாலையில் வளைந்து வளைந்து பயணித்தால் எதிர்ப்படும் மலைக்குன்றுகளில் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்க நேரிடும். அந்தக் குன்றுகளின் நடுநாயகமாக இருக்கும் கட்டாஞ்சி மலை உச்சியில்தான், பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். பிரகாரத்தில் போய் நின்றாலே ஏதோ திருப்பதி ஏழுமலையான் முன்பு நின்ற உணர்வு. “முன்பெல்லாம் இந்த மலைக்குச் சாலை வசதியே கிடையாது. இப்ப மூன்று வருஷமாகத்தான் சாலை. காடாக இருந்த காலத்திலேயே புரட்டாசி பூஜைக்கு மக்கள் வெள்ளம் காடு கொள்ளாது. இப்போது சொல்லவே வேண்டாம்!” என்று ஆரம்பித்த இக்கோயிலின் குருக்கள், சில வாரங்கள் முன்புதான் இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்ததையும் விவரித்தார்.
 

காவிரியைக் கடந்தார் பெருமாள்

21chsrspurattasi22right

இஸ்லாமியரின் ஆட்சியில் மைசூர் அம்சவாடியிலிருந்து தண்டிகையில் (பல்லக்கு) எடுத்து வரப்பட்டு சத்தியபாமாவுடன் திருக்காவிரி தாண்டி, காரமடை அருகில் உள்ள கணவாய் மலையில் துணசி குட்டை (துளசி வனம்) எனும் வனத்தில் மத்தாவதார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்து வந்தார் கோவிந்த பட்டாரகன். இவர் ஒக்கலிக இனத்தைச் சேர்ந்தவர்.

அந்தக் காலத்தில் பெருமாளுக்குப் பாண்டிய குறுநில மன்னர் துணையுடன் (அடையாளமாகப் பிரகாரச் சுவரில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன) திருப்பணிகளும் செய்து வந்தவர்கள் அம்சவாடியிலிருந்தே பெருமாளுடன் புறப்பட்டு வந்தவர்கள். அம்சவாடியில் பெருமாள் புறப்பட்டு வரும்போது காவிரித்தாய் பெருக்கெடுத்து ஓட, ஆராதகர்கள் கனிந்து பாட காலளவு ஜலமாக ஓடினாள். அதையடுத்தே காவிரியைக் கடந்தார் பெருமாள் என்பது ஐதீகம்.

கிழக்கே திருமுக மண்டலம், நின்ற கோலத்துடன் அபயகஸ்தமம் கொண்டு சங்கு சக்கரதாரியாய் சேவை சாதிக்கும் தண்டிகை ரங்கநாத ஸ்வாமி மூலவராக வீற்றிருக்கிறார்.

 

# இஸ்லாமியர் ஆட்சிகாலத்தில் உருவான ஆலயம் இது

# மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் பூஜை உண்டு

# உற்சவர் இல்லாத கோயில் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x