Published : 24 Mar 2023 01:02 PM
Last Updated : 24 Mar 2023 01:02 PM
கும்பகோணம்: கும்பகோணம் மங்களாம்பிகை அம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர் கோயிலில், ரூ.8 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளவதற்கான பாலாலய சிறப்பு யாகம் தொடங்கியது.
இந்தக் கோயிலில் 2009, ஜூன் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில், கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.8 கோடியில் திருப்பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் மற்றும் அதைத்தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
இன்று தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாக சாலை பூஜைகளும், நாளை 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான 27-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி, காலை 6.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சு.சாந்தா, செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment