Last Updated : 12 Mar, 2023 04:23 AM

 

Published : 12 Mar 2023 04:23 AM
Last Updated : 12 Mar 2023 04:23 AM

ஆழ்வார்களின் படைப்பில் இருக்கும் கருத்துகளை அனைவரையும் ஈர்க்கும்படி சொல்ல வேண்டும்: வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி அறிவுரை

சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் நடைபெற்ற வேளுக்குடி சுவாமியின் மூன்றாம் திருவந்தாதி காலக்‌ஷேபம் சாற்றுமுறை நிகழ்ச்சியில் பேசிய உ.வே.ரங்கநாதன் கிருஷ்ணன். உடன், அத்தங்கி உ.வே.நிவாஸாசார்ய சுவாமி, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி. முனைவர் உ.வே.எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் சுவாமி, உ.வே.கே.பி.தேவராஜன் சுவாமி.

கே.சுந்தரராமன்

சென்னை: ஆழ்வார்களின் படைப்பில் இருக்கும் கருத்துகளை, அனைவரையும் ஈர்க்கும்படி இளம் தலைமுறையினர் சொல்ல வேண்டும் என்று ஆன்மிக உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி அறிவுறுத்தினார்.

வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் மூன்றாம் திருவந்தாதி காலக்‌ஷேபம் சாற்றுமுறை மற்றும் நாலாயிர திவ்யப்பிரபந்த காலக்‌ஷேபங்களின் நிறைவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, வேளுக்குடி சுவாமியின் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

பகவத் ராமானுஜர் முதலான ஆச்சாரியப் பெருமக்களால் வளர்க்கப்பட்ட வைணவ மதத்தின் கொள்கைகள், இன்றுவரை பல்வேறு சான்றோர்களால் இளம்தலைமுறைக்கு கூறப்பட்டு வருகின்றன. இன்றைய காலகட்டத்தில், அவர்களுள் முக்கியமான ஒருவராகத் திகழ்பவர் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி.

கடந்த பல வருடங்களாக இவர் நடத்தி வந்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்த தொடர் சொற்பொழிவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் கோயிலில், பழமை மாறாமல் முன்னோரின் உரைப்படி நடைபெற்றது. முன்னதாக, கிருஷ்ணன் சுவாமியின் மூன்றாம் திருவந்தாதி காலக்‌ஷேபம் சாற்றுமுறையும் நடைபெற்றது.

பின்னர் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் சஷ்டியப்த பூர்த்தி (60-வது பிறந்த நாள்) கொண்டாட்டம் தொடங்கியது. நிகழ்ச்சியில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் மகனும், ஆன்மிக உபன் யாசகருமான ரங்கநாதன் கிருஷ் ணன் வரவேற்றுப் பேசியதாவது: பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியின் காலக்‌ஷேபங்க்ஷகளை பேயாழ்வார் அவதரித்த தலமான சென்னை மயிலாப்பூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் கோயிலில் வேளுக்குடி கிருஷ்ணன்சுவாமி நிறைவு செய்துள்ளார்.

12 ஆழ்வார்களாலும் பாடப்பட்டதிவ்யப் பிரபந்தங்களுக்கும் சுவாமி பெரியவாச்சான் பிள்ளை,நம்பிள்ளை போன்ற வைணவஆச்சாரியர்களால் இயற்றப்பட்ட அனைத்து உரை நூல்களையும், ராமானுஜ நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி ஆகிய பிரபந்த உரைகளையும் சுவாமிகாலக்‌ஷேபமாகக் கூறி முடித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு ஊர்களில் 1,500-க்கும் மேற்பட்ட அமர்வுகளில், 2,800மணி நேரத்துக்கு காலக்‌ஷேபங்களை நிகழ்த்தி, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி ஆன்மிகத் தொண்டுபுரிந்துள்ளார். இந்த சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவுகளும் வெளியிடப் பட்டுள்ளன. மேலும், வேளுக்குடி சுவாமியின் சஷ்டியப்த பூர்த்தியின் தொடக்க விழா வைக் கொண்டாடும் வகையில், இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து முனைவர் உ.வே.எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் சுவாமி, உ.வே.கே.பி.தேவராஜன் சுவாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அத்தங்கி உ.வே.நிவாஸாசார்ய சுவாமி, வேளுக்குடி சுவாமியின்காலக்‌ஷேபங்களில் கலந்து கொண்டதன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி ஏற்புரையாற்றியதாவது: எனது தந்தை உ.வே.வரதாசார்ய சுவாமி, தன்னுடைய காலக்‌ஷேபத்தை வழங்கும்போது, ஆச்சாரியர்கள் மற்றும்ஆழ்வார்கள் அருளிய படைப்புகளின் கருத்துகளை எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைப்பார்.

அதேபோல, இன்றைய தலைமுறையினரும் அப்படைப்புகளில் இருக்கும் கருத்துகளின் சாராம்சத்தை மாற்றாமல், அனைவரையும் ஈர்க்கும்படி சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, கிஞ்சித்காரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நாலாயிர திவ்யப் பிரபந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x