Published : 03 Feb 2023 06:25 AM
Last Updated : 03 Feb 2023 06:25 AM

திருமலை ஏழுமலையான் கோயிலில் 5-ம் தேதி பவுர்ணமி தின கருடசேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி இரவிலும் கருடவாகன சேவை நடைபெறுவது வழக்கம். இந்த மாதம் 5-ம் தேதி இரவு 7 மணிக்கு திருமலையில் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருள உள்ளார். மேலும் இதேநாளில் திருமலையில் ராமகிருஷ்ண முக்கோட்டியும் கடைபிடிக்கப்படஉள்ளது.

திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் சுமார் 3 கோடி தீர்த்தங்கள் உள்ளதாக கருட புராணம் கூறுகிறது. இவற்றில் சுவாமி கோயில் அருகே உள்ள குளம் (புஷ்கரணி), ஆகாச கங்கை உட்பட பல தீர்த்தங்கள் முக்கியமானவையாக கூறப்படுகிறது.

இதில் ராமகிருஷ்ணா புனித தீர்த்தத்தின் அருகே ஸ்ரீராமருக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் 5-ம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதனையே ராமகிருஷ்ண முக்கோட்டி என்று அழைக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x