Published : 27 Jan 2023 04:37 AM
Last Updated : 27 Jan 2023 04:37 AM

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதில் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுமென நேற்று திருப்பதியில் நடந்த குடியரசு தின விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி கூறினார்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக வளாகத்தில் நேற்று 74-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்ற தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தேசிய கொடியை ஏற்றி, திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் தர்மாரெட்டி பேசியதாவது: பலரின் தியாகங்களால்தான் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதில் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் வரை வெறும் சாமானிய பக்தர்களுக்கே சொர்க்க வாசல் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இதில் 6 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். சாமானிய பக்தர்கள் வெகு நேரம் காத்திருக்க கூடாது என்ற எண்ணத்தில் தான், கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 2 மாதங்கள் வரை இதே நிலைதான் நீடிக்கும். இவ்வாறு தர்மாரெட்டி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x