Published : 18 Jan 2023 04:10 AM
Last Updated : 18 Jan 2023 04:10 AM
மதுரை: முருகப்பெருமானில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தைத் தெப்பத் திருவிழா கொடியேற்றம் ஜன.22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
அன்று காலை சிம்மாசனத்தில் சுப்பிரமணியர் தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். அன்றிரவு 7 மணியளவில் மயில் வாக னத்தில் எழுந்தருள்கிறார். அதனைத் தொடர்ந்து காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். ஜன.30-ம் தேதி காலை 9 மணிக்கு தெப்பம் முட்டுத் தள்ளுதலும், ரத வீதிகளில் சிறிய வைரத்தேரில் வலம் வருதலும் நடைபெறும்.
ஜன.31-ல்காலை 11 மணிக்கு சுவாமி தெப்பத்துக்கு எழுந்தருள்கிறார். அன்று மாலை 6 மணிக்கு தெப்ப மைய மண்டபத்தில் பத்தி உலாத்துதல், இரவு 7 மணிக்கு சுவாமி தெப்பத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் இரவு 8.30 மணிக்கு சுப்பிரமணியர் தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.
பின்னர் 16 கால் மண்டபம் அருகில் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT