Published : 31 Dec 2022 07:35 AM
Last Updated : 31 Dec 2022 07:35 AM

சபரிமலையில் 10 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய ஐயப்ப சேவா சங்கம்

மதுரை: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் மண்டல காலத்தில் நவ, 16 முதல் டிச.27-ம் தேதி வரைசுமார் 10 லட்சம் பேருக்கு 3 வேளை அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகர விளக்கு கால பூஜையையொட்டி டிச. 30 முதல் ஜன. 19-ம் தேதி வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், உடல் நலக்குறைவு ஏற்பட்ட பக்தர்களை உடனே அருகிலுள்ள பம்பா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 628 முறை ஸ்டெச்சர் சர்வீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அன்னதானத்துடன் மூலிகைக் குடிநீர், புண்ணிய பூங்காவனம் மற்றும் பவித்ரா சபரிமலை சேவைகளில் 1,064 அகில பாரத ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் ஈடுபட்டனர். தமிழக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், கேரள காவல் துறை உயரதிகாரிகள், தேவஸம் போர்டு, விஜிலென்ஸ் அதிகாரிகள் என முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

மகர விளக்கு பூஜை காலத்தில் பக்தர்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவ உதவி, ஸ்டெச்சர் சர்வீஸ் போன்ற சேவைகளை ஐயப்ப சேவா சங்கத்தின் மத்தியபொதுச்செயலர் கோவிந்தபத்மன், மத்திய, மாநில நிர்வாகிகள் மு. விசுவநாதன், க. அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி, சந்நிதான முகாம் அலுவலர் ஏஜி. பாலகணேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இத்தகவலை மாநிலத் தலைவர் மு.விசுவநாதன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x