Published : 06 Dec 2022 12:58 PM
Last Updated : 06 Dec 2022 12:58 PM

4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயில் திருத்தேரோட்டம்

சுவாமிமலை முருகன் கோயில் திருத்தேரோட்டம் நிகழ்வு

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

சுவாமிமலை முருகன் கோயிலில் கடந்த 1-ம் தேதி முன்னை முதல்வன் வழிபாடும் திருமண எடுத்ததலும், 2-ம்தேதி ஐம்பெரும் கடவுளர்கள் காட்சியும், கொடியேற்றம் நடைபெற்றது. 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பல்வேறு வாகனங்கள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (6-ம் தேதி) காலை திருக்கார்த்திகையை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் பக்தர்கள் அரோகரா அரோகரா என வடம் பிடித்து 4 வீதிகள் வழியாக தேர் நிலைக்கு இழுத்துச் சென்றனர்.

தொடர்ந்து, இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், தீபக்காட்சியும் நடைபெற்றது. 7-ம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. 8-ம் தேதி காலை சுவாமி பரிவாரங்களுடன் யதஸ்தானம் செல்வது நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் சு.மோகனசுந்தரம், துணை ஆணையர் தா உமாதேவி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x