Published : 27 Nov 2022 07:11 AM
Last Updated : 27 Nov 2022 07:11 AM

சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா

திருப்பதி: வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு, நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார், சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் தாயார் எழுந்தருளினார். 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட வீதிகளில் குவிந்திருந்த திரளான பக்தர்கள் தாயாருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் 6 கிலோ எடையில், ரூ.3 கோடி செலவில் புதிய சூரிய பிரபை வாகனத்தை தயார் செய்தது. இதில், தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 8-ம் நாளான இன்று தேர் திருவிழாவும், நிறைவு நாளான நாளை திங்கட்கிழமை பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x