Published : 24 Nov 2022 06:47 AM
Last Updated : 24 Nov 2022 06:47 AM

கற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

ராஜமன்னார் அலங்காரத்தில் பவனி வந்த பத்மாவதி தாயார்.

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதி யானை சின்னம் பொறித்த கொடியேற்றத்துடன் தொடங்கியது.

4-ம் நாளான நேற்று காலையில் ராஜமன்னார் அலங்காரத்தில் தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையில் காளை, குதிரை, யானை பரிவட்டங்கள் முன்னே செல்ல, ஜீயர்கள் திவ்ய பிரபந்தத்தை பாடியபடி சென்றனர். ஆந்திரா உட்பட பிற மாநில நடன கலைஞர்கள் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்களை ஆடியபடி முன் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இரவு ஹனுமன் வாகனதில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பதி ஏழுமலையானை வரும் டிசம்பர் மாதம் சிறப்பு சலுகை டிக்கெட் வாயிலாக 65 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான டிக்கெட், இணையதளம் மூலம் இன்று காலை 10 மணிக்கு வெளி யாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x