Published : 10 Nov 2022 05:15 AM
Last Updated : 10 Nov 2022 05:15 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதில்லை. சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சர்வ தரிசன டோக்கன்கள் தினமும் 25 ஆயிரம் வீதமும் மற்ற வார நாட்களில் தினமும் 15 ஆயிரம் வீதமும் வழங்கப்படுகின்றன.
இதுதவிர ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களும் தினசரி 20 ஆயிரம் வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே முந்தைய மாதத்திலேயே வழங்கப்பட்டு விடுகிறது. மேலும், 65 வயது நிரம்பிய மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், வெளிநாடு வாழ் இந்திய பக்தர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், சுற்றுலாத்துறை பஸ் பயணிகள், விஐபி சிபாரிசு கடிதங்கள் மூலம் வரும் பக்தர்கள், ஸ்ரீ வாணி அறக்கட்டளையின் கீழ் ரூ.10,500 செலுத்தி வரும் பக்தர்கள், நேரடியாக வரும் விவிஐபிக்கள் என தினமும் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளை வெள்ளிக்கிழமை 11-ம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், வரும் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT