Published : 23 Nov 2016 04:58 PM
Last Updated : 23 Nov 2016 04:58 PM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சுக்கிரன், 11-ல் ராகு உலவுவது சிறப்பு. வார தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. குருவுடன் சந்திரன் சேர்ந்திருப்பதால் பெரும்பாலும் சுபச் செலவுகளே ஏற்படும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். வார நடுப்பகுதியிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
கலைஞானம் கூடும். மாதர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வாரப் பின்பகுதியில் பொருளாதார நிலை உயரும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். சூரியனும் சனியும் ஒன்று கூடி 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். கண் உபத்திரவம் ஏற்படும். இன்ஜினீயர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், இள நீலம், பச்சை. l எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி, குருவை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய், 10-ல் ராகு, 11-ல் குரு உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் வார முற்பகுதியில் நிறைவேறும். மன மகிழ்ச்சி பெருகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிடைக்கும். பெண்களின் எண்ணம் ஈடேறும். எதிர்ப்புகள் விலகும்.
போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வார நடுப்பகுதியில் சுபச் செலவுகள் சற்று கூடும். வாரக் கடைசியில் அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும். உஷ்ணாதிக்கத்தால் பாதிப்பு நேரலாம். 25-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களது நிலை உயரும். திடீர் பொருட்சேர்க்கை நிகழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.
திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு. l எண்கள்: 3, 4, 6, 9.
பரிகாரம்: ஜன்மச் சனிக்கும், 4-ல் உலவும் கேதுவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நலம் கூட்டும். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது அவசியம். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும்.
ஆன்மிகவாதிகள், அறநிலையப் பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகமாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஏற்படும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசாங்கம், தந்தை, வேலையாட்களால் சங்கடம் உண்டாகும். 25-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. உடல் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.
திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை. l எண்கள்: 6, 7.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு செய்யவும். கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் சூரியன்; புதனும்; சனி, 12-ல் சுக்கிரன் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். மகன் அல்லது மகளுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. பொதுப் பணிகளில் ஆர்வம் கூடும். வாரப் பின்பகுதியில் பொருளாதார நிலை உயரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். 25-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.
திசைகள்: தென் கிழக்கு, வட கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பொன் நிறம். l எண்கள்: 1, 3, 5, 6, 8.
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், சனியும், 11-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. அரசு சம்பந்தமான காரியங்கள் இனிது நிறைவேறும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். கணவன்-மனைவிக்கு அனுகூலம் உண்டாகும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். தொழிலாளர்கள், விவசாயிகள் அனுகூலமான போக்கைக் காண்பார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.
பெற்றோரால் நலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள், மக்களால் சில இடர்ப்பாடுகளும் செலவுகளும் மனச் சலனமும் உண்டாகும். 25-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளாலும், உற்றார்-உறவினர்களாலும் நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 29.
திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: இள நீலம், பச்சை, கரு நீலம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 8.
பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் குரு, 11-ல் செவ்வாய் உலவுவது சிறப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் பயந்து ஒளிவார்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ரசாயனத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்புக் கூடும். புதிய சொத்துகள் சேரும்.
குடும்ப நலம் திருப்தி தரும். சிவப்பு, பொன்நிறப் பொருட்கள் லாபம் தரும். 25-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்புத் தருவார்கள். வாரப் பின்பகுதியில் சூரியன், சனி, சந்திரன் ஆகியோர் ஒன்று கூடுவதால் தந்தை நலனில் கவனம் தேவை. கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25.
திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், சிவப்பு. l எண்கள்: 3, 4, 9.
பரிகாரம்: சூரியன், சனிக்கு அர்ச்சனை செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT