Published : 23 Oct 2022 05:11 AM
Last Updated : 23 Oct 2022 05:11 AM
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 30-ம் தேதி வரை ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் 26-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
தினமும் 35 ஆயிரம் டிக்கெட் வீதம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், மறுநாள் 27-ம் தேதி காலை 10 மணிக்கு அதே இணைய தளம் மூலம் திருமலையில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment