Published : 03 Nov 2016 12:03 PM
Last Updated : 03 Nov 2016 12:03 PM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 2-லும், ராகு 11-லும் உலவுவது சிறப்பு. நூதனமான பொருட்கள் சேரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொள்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடும். பெண்களின் எண்ணம் ஈடேறும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு வலுப்பெறும். தோல் பொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.
5-ல் கேதுவும், 12-ல் குருவும் உலவுவதால் மனதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சூரிய பலம் குறைந்திருப்பதால் அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. 4-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடம் மாறுவதால் முயற்சி வெற்றி தரும். நல்ல தகவல் வந்துசேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 6, 7, 9.
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், இள நீலம். l எண்கள்: 4, 6.
பரிகாரம்: விநாய கரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும். பெரியவர்களிடம் பணிவு தேவை.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரன், 3-ல் செவ்வாய், 10-ல் ராகு, 11-ல் குரு உலவுவது சிறப்பு. புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கி வசூலாகும். கடன் தொல்லை குறையும். எதிரிகள் அடங்குவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். முயற்சி வீண்போகாது.
செயலில் வேகம் கூடும். எடுத்தக் காரியத்தில் வெற்றி கிடைக்கும். 4-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 2ம் இடம் மாறுவதால் விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். 4-ல் கேது, 12-ல் சூரியன் இருப்பதால் பெற்றோர் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 6, 7, 9.
திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 6, 9. l பரிகாரம்: சூரியன், சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 11-ல் சூரியன்; புதன், 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் கட்டுக்குள் இருப்பார்கள். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும்.
ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். 4-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை தேவை. நிதானமாகச் செயல்பட்டால் நஷ்டத்தைக் குறைத்துக்கொள்ளலாம். 8-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் நூதன பொருட்சேர்க்கை நிகழும். கலைஞானம் கூடும். 2-ல் செவ்வாய், 12-ல் சனி இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண்வம்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 6, 7, 9.
திசைகள்: வட மேற்கு, கிழக்கு, வடக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பச்சை, இள நீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 7. l பரிகாரம்: சனிக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெய் தீபமேற்றி, அர்ச்சனை செய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-ல் சூரியன்; புதன், 11-ல் சுக்கிரன்; சனி உலவுவது சிறப்பு. முக்கியமான ஆசைகள் சில நிறைவேறும். வாழ்க்கை வசதிகள் பெருகும். சுப காரியச் செலவு செய்ய வேண்டிவரும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். தொழிலாளர்கள், விவசாயிகளின் நிலை உயரும். ஜன்ம ராசியில் செவ்வாய் உலவுவதால், எதிலும் பதற்றம் கூடாது. வாரப் பின்பகுதியில் சந்திரனும் கேதுவும் 2-ல் ஒன்று சேர்வதால் பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை.
குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும். 4-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடம் மாறுவதால் சுபச் செலவுகள் கூடும். பிள்ளைகள் நலனுக்காகவும் தொழில் முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்வீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 6, 7.
திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 8. l பரிகாரம்: நாக வழிபாடு செய்வது அவசியம்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சனி உலவுவது நல்லது. உழைப்பு, திறமைக்கேற்ற பயன் கிடைக்கும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். 4-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் கணிதம், எழுத்து, விஞ்ஞானம், பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவதால் ஆடை, அணிமணிகள் சேரும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும், 12-ல் செவ்வாயும் இருப்பதால் கோபம் நல்லதல்ல. எக்காரியத்திலும் வேகம் கூடாது. குரு பலம் குறைந்திருப்பதால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பெரியவர்களிடம் பணிவன்புடன் பழகவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 9.
திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை. l எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: செவ்வாய், குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
மீனம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 7-ல் குருவும், 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். காரியத்தில் வெற்றி கிட்டும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். புதிய முயற்சிகள் கைகூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள்.
வழக்கில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். 4-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. சூரிய பலம் குறைந்திருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை. 8-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடம் மாறுவதால் தொழில் சம்பந்தமான சில பிரச்சினை கள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 6, 7.
திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், சிவப்பு, இள நீலம், வெண்மை.
எண்கள்: 3, 4, 5, 6, 9. l பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும். சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT