Published : 30 Aug 2022 04:22 AM
Last Updated : 30 Aug 2022 04:22 AM

திருமலையில் அடுத்த மாத விசேஷங்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் மாத விசேஷ நாட்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ம் தேதி மாத ஏகாதசி விரதம், செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வாமன ஜெயந்தி, 9-ம் தேதி அனந்த பத்மநாப விரதம், 11-ம் தேதி மகாளய பக்‌ஷம் தொடக்கம், 13-ம் தேதி, புருஹத்யும விரதம், 25-ம் தேதி மகாளய அமாவாசை, 26-ம் தேதி பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பனம், 27-ம் தேதி பிரம்மோற்சவம் தொடக்கம், இரவு, பெரிய சேஷ வாகன சேவையுடன் முதல் நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஏழுமலையானின் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 5-ம் வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x