Published : 06 Oct 2016 11:46 AM
Last Updated : 06 Oct 2016 11:46 AM

வார ராசிபலன் 06-10-2016 முதல் 12-10-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ராசியிலேயே வலுத்திருக்கிறார். 3-ல் செவ்வாய், 11-ல் ராகு உலவுவது நல்லது. பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். எதிரிகள் ஏமாந்து போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும், வழக்கு; வியாஜ்ஜியங்களிலும், விளையாட்டு; விநோதங்களிலும் வெற்றி காணச் சந்தர்ப்பம் சாதகமாக அமையும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துகளால் வருவாயும் கிடைத்துவரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களின் எண்ணம் ஈடேறும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பிள்ளைகளாலும் தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 7 (பிற்பகல்), 11.



திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு, தெற்கு.



நிறங்கள்: சாம்பல் நிறம், இள நீலம், சிவப்பு.



எண்கள்: 4, 6, 9.



பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் ராகு, 11-ல் சூரியன்; புதன்; குரு, 12-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. வார ஆரம்பத்தில் சந்திரன் சனியுடன் கூடி ஜன்ம ராசியில் உலவுவதால் அலைச்சல் கூடும். அதிகம் உழைக்க வேண்டிவரும். மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். 7-ம் தேதி பிற்பகலிலிருந்து பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கடன் கிடைக்கும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கியே இருப்பார்கள். 10-ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல தகவல் வந்து சேரும். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். ஜன்ம ராசியில் சனியும், 2-ல் செவ்வாயும், 4-ல் கேதுவும் இருப்பதால் உடல் நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. தாய் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 7 (பிற்பகல்), 11.



திசைகள்: கிழக்கு, தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.



நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, வெண்சாம்பல் நிறம், பொன் நிறம்.



எண்கள்: 1, 3, 4, 5, 6.



பரிகாரம்: ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடுவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 10-ல் சூரியன்; புதன், 11-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். அரசுப் பணியாளர்களுக்கு முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஜன்ம ராசியில் செவ்வாய் உலவுவதால் எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. 12-ல் சனி இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 7 (பிற்பகல்), 11.



திசைகள்: வட மேற்கு, கிழக்கு, வடக்கு, தென் கிழக்கு.



நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பச்சை, இள நீலம், வெண்மை.



எண்கள்: 1, 5, 6, 7.



பரிகாரம்: சனிப் பிரீதி செய்துகொள்ளவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் சனி உலவுவது சிறப்பு. 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் உலவினாலும் நலம் புரிவர். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். தெய்வப் பணிகள் நிறைவேறும். 12-ல் செவ்வாய், 2-ல் கேது, 8-ல் ராகு உலவுவதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். நிலபுலங்களால் பிரச்சினைகள் உண்டாகும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 11.



திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, மேற்கு.



நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.



எண்கள்: 3, 5, 6, 8.



பரிகாரம்: சுப்பிரமணியர், நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதன், 9-ல் சுக்கிரன், 10-ல் சனி, 11-ல் செவ்வாய் உலவுவதால் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றிபெறுவீர்கள். வியாபாரம் பெருகும். கலைத் துறை ஊக்கம் தரும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பலன் கிடைக்கும். சமுதாய நல முன்னேற்றப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். காப்பீடு சம்பந்தமான இனங்களால் பணம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சூரியன், குரு, ராகு, கேதுவின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றம் தடைபடும். பிற மொழி, மத, இனக்காரர்களிடம் எச்சரிக்கை தேவை.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 7 (பிற்பகல்).



திசைகள்: தென் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு.



நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை.



எண்கள்: 5, 6, 8, 9.



பரிகாரம்: நாகரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் குரு, 8-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய் உலவுவது நல்லது. புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணப் புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இயந்திரப் பணியாளர்களுக்கு ஏற்றம் உண்டாகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெருகும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 7 (பிற்பகல்), 11.



திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.



நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், சிவப்பு, இளநீலம், வெண்மை.



எண்கள்: 3, 4, 6, 9.



பரிகாரம்: ஆதித்தனை வழிபடுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x