Published : 29 Sep 2016 10:52 AM
Last Updated : 29 Sep 2016 10:52 AM

வார ராசிபலன் 29-9-2016 முதல் 5-10-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவி புரிவார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையில் லாபம் உண்டு. மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். தரகுத்தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும்.

தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். தந்தையால் நலம் உண்டாகும். மக்களாலும், வேலையாட்களாலும் பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைப்பளு அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பதன் மூலம் உடல் அசதியைக் குறைத்துக் கொள்ளலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2, 3.

திசைகள்: கிழக்கு, வடக்கு, வடமேற்கு.

‎நிறங்கள்: மெரூன், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 7.‎

பரிகாரம்: துர்க்கையையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுவது நல்லது.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. புதன் 5-ல் உலவினாலும் நலம் புரிவார். அலைச்சல் சற்று அதிகரிக்கும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட வகையில் லாபம் உண்டு. அறிவாற்றல் பளிச்சிடும். மாணவர்களது திறமை வெளிப்படும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானத் துறையினர் சுபிட்சம் காண்பார்கள்.

மந்திர, தந்திர,யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி பெறுவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். குரு அருளால் திருவருள் கிட்டும். வாரப் பின்பகுதியில் பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும், உடன்பிறந்தவர்களாலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும்.சகிப்புத் தன்மை தேவை. கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. ஆடம்பரம் கூடாது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2, 3, 5.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 7

பரிகாரம்: காமாட்சியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 6-ல் சனியும் உலவுவது நல்லது. புதியவர்களின் தொடர்பும் அனுகூலமும் பெறுவீர்கள். பயணம் பயன் தரும். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். வியாபாரத்தில் வளர்ச்சியைக் காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகுத் தொழிலில் லாபம் உண்டு. கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள்.

அதிர்ஷ்ட வகையில் லாபம் உண்டு. பெண்களால் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் லாபமோ கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு அனுகூலமான போக்கு தென்படும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பு கூடும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். மனத்தில் உற்சாகம் பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக்.2, 3, 5.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: புகை நிறம், வெண்மை, பச்சை, நீலம்.

எண்கள்: 4, 5, 6, 8.

பரிகாரம்: கணபதியை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நிர்வாகத்திறமை கூடும். சுகமும் சந்தோஷமும் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், நிலபுலங்கள், வாகனச் சேர்க்கை உண்டு. எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடுகூடும். 3-ல் குருவும், 5-ல் சனியும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்னைகள் சூழும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்பதால் சிறிய இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். முன்பின் தெரியாதவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2, 3, 5.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, ஆரஞ்சு, இளநீலம், சிவப்பு.

எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் குருவும் 3-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சாற்றல் வெளிப்படும். பல வழிகளில் பணம் வந்து சேரும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். கடன் தொந்தரவு குறையும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். மாணவர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், கல்வித்துறையினர், வங்கிப்பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வெற்றிநடை போடுவார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். அலைச்சல் கூடும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2, 3, 5.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: துர்க்கையையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதியான புதன், ஜன்ம ராசியில் இருந்தாலும் நலம் புரிவார். 2-ல் சுக்கிரனும் 3-ல் சனியும், 6-ல்கேதுவும் உலவுவது சிறப்பாகும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராகும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பேச்சில் திறமையும் இனிமையும் கூடும். வசீகரச் சக்தி உண்டாகும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். மாதர்களது நோக்கம் நிறைவேறும்.

புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், தரகு போன்ற துறைகளில் லாபம் உண்டு. தொழிலாளர்களது கோரிக்கைகள் வாரப்பின்பகுதியில் நிறைவேறும். பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். ஆடவர்களுக்குப் பெண்டிரால் அனுகூலம் உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் லாபம் வரும். 4-ல் செவ்வாயும், 12-ல் ராகுவும் உலவுவதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2, 3, 5.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்: துர்க்கையையும் முருகனையும் வழிபடுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x