Published : 26 Jul 2022 03:41 AM
Last Updated : 26 Jul 2022 03:41 AM
| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 26-ம் நாளில் அத்தி வரதர் இளம் சிவப்பு (ரோஜா) நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். அத்தி வரதர் பஞ்சவர்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். கிரீடமும் சூட்டப்பட்டது. வண்ண மலர்களாலும், கரும்புகளாலும் வசந்த மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால், மோர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஊழியர்கள் பால், மோர் ஆகியவற்றை வழங்கினர். மின்துறை அமைச்சர் தங்கமணி, பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் அத்தி வரதரைத் தரிசனம் செய்தனர்.
அத்தி வரதரை வழிபட்ட தெலங்கானா ஆளுநர்
காஞ்சிபுரத்தில் தெலங்கானா ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் அத்தி வரதரை வழிபாட்டார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வரவேற்றார். மேற்கு ராஜகோபுரம் கோபுரத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லப்பட்ட அவர் வசந்த மண்டபத்துக்கு சென்று அங்கு அத்தி வரதரை வழிபட்டார். அவருக்கு கோயில் பட்டாச்சாரியர்கள் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT