Published : 08 Jul 2022 04:25 AM
Last Updated : 08 Jul 2022 04:25 AM
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் எட்டாம் நாளில் இளம் சிவப்பு (ரோஜா) நிற பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அத்தி வரதரை தரிசனம் செய்தனர். இதனால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் இருக்கும் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சி அளித்தன.
அத்தி வரதர் படங்கள்
அத்தி வரதர் பல்வேறு வண்ண பட்டாடைகளுடன் காட்சி அளிக்கும் படங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.20 முதல் ரூ.30 வரை இவை விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த படங்களை தங்கள் வீடுகளில் வைப்பதற்கு பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஆன்மிக புத்தகக் கடைகளும் வரதராஜ பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன.
மினி பேருந்துகளில் நிரம்பி வழியும் கூட்டம்
கோயிலுக்கு வரும் பெரும்பாலான கார்கள் நகரத்துக்கு வெளியே நிறுத்தப்படுகின்றன. இதனால் அத்தி வரதர் வைபவத்துக்காக இயக்கப்படும் மினி பேருந்துகளில் அதிக அளவு பக்தர்கள் கூட்டமாகச் செல்கின்றனர்.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் பார்த்திபன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். மேலும் பல முக்கிய பிரமுகர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment