Published : 05 May 2016 12:26 PM
Last Updated : 05 May 2016 12:26 PM

வார ராசிபலன் 05-05-2016 முதல் 11-05-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 5-ல் குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். நல்லவர்களது நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு கூடிவரும். வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் வந்துசேரும்.

பண வரவு சீராக இருந்துவரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். தலை சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் தொல்லைகள் சூழும். வீண்வம்பு கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 8, 9, 11.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.

‎நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7. ‎l

பரிகாரம்: திருமாலை வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனத்துணிவு கூடும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். உடல் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும்.

குடும்பத்தில் குதூகலம் கூடும். அலைச்சல் வீண்போகாது. இயந்திரப் பணிகள் லாபம் தரும். பயணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. வியாபாரிகள், அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் முன்னேற்றம் காண அரும்பாடுபட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 5, 8, 9, 11.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம் கேட்கலாம். தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெறுவது நல்லது.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும், 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு வக்கிரமாக உலவுவது நல்லது. பொருளாதார நிலை உயரும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை கூடும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களால் அனுகூலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் கூடிவரும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி துறைகளால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள் : மே 5, 9 (இரவு), 11.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 5-ல் செவ்வாயும், 10-ல் சூரியனும் புதனும் சஞ்சரிப்பது சிறப்பாகும். பொருளாதார நிலை உயரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். புதிய பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். அரசு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும்.

முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். சிக்கனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். புதியவர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. கண், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 5, 8, 9 (பகல்).

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, சிவப்பு.

எண்கள்: 1, 3, 5, 9.

பரிகாரம்: ஆதிசேஷனையும், நாகேஸ்வரரையும் வழிபடுவது நல்லது.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சூரியன் 9-ல் தன் உச்ச ராசியில் உலவுவதாலும், சுக்கிரன் 9-ல் இருப்பதாலும் தான, தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்துசேரும். செய்துவரும் தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மாதர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். அரசியல், நிர்வாகம், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். குடும்ப நலம் சீராக இருந்துவரும். வாழ்க்கைத் துணைவராலும் தந்தையாலும் நலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. புதியவர்களிடம் நெருக்கம் வேண்டாம். வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் ஈடேற வழிபிறக்கும். பண வரவும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 8, 9, 11.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: சிவ வழிபாடு நலம் தரும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். ஜலப் பொருட்கள் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். ஆன்மிகப் பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

கலைஞர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் நிறைவேறும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 8, 9, 11.

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, மெரூன், இளநீலம்.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: சூரியனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x