Published : 20 May 2016 02:17 PM
Last Updated : 20 May 2016 02:17 PM
பெரிய பணக்காரர், ஜென் துறவியைச் சந்தித்து, “நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டான்.
ஒரு அதற்கு அந்த ஜென் துறவி ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் “தந்தை இறப்பான், மகன் இறப்பான், பேரன் இறப்பான்” என்று எழுதிக் கொடுத்தார்.
அதைப் படித்த பணக்காரருக்கோ கோபம் மூண்டது.
“என்ன இது? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர் அதைப் படித்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குக் கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதித் தருகிறீர்களே! இது சரிதானா..?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.
அதற்குத் துறவி , “ஆமாம். நானும் நீங்கள் கேட்டது போல்தான் எழுதியுள்ளேன். எப்படியெனில், ஒரு வேளை உங்கள் மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும். அதுவே உங்கள் பேரன் முதலில் இறந்தால், அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும். எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள். அதுதான் இயற்கையின் உண்மை. அதைத்தான், அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன்.” என்றார்.
பணக்காரர் விழிப்புணர்வை அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT