Published : 12 May 2016 12:38 PM
Last Updated : 12 May 2016 12:38 PM
துலாம் ராசி வாசகர்களே
குரு, ராகு ஆகியோர் 11-மிடத்தில் உலவுவதாலும், வார முன்பகுதியில் சந்திரன் சாதகமாக இருப்பதாலும் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். திரவப்பொருட்கள் லாபம் தரும். பால், தயிர், வெண்ணெய் மற்றும் வெண்மை நிறப்பொருட்களால் வருவாய் கூடும். கற்பனை ஆற்றல் பளிச்சிடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.
கடல் வாணிபம் லாபம் தரும். வாரக் கடைசியில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. 14-ம் தேதி முதல் சூரியன் 8-மிடம் மாறுவது சிறப்பாகாது. உடல் நலனில் கவனம் தேவைப்படும். வாழ்க்கைத்துணைவராலும் தந்தையாலும் சங்கடங்கள் ஏற்படும். அரசுப் பணிகளில் கவனம் தேவை. 18-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 16 (பகல்).
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-மிடத்தில் சூரியனும் புதனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். குரு 10-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். சந்திரன் வாரம் முழுவதும் அனுகூலமாகவே உலவுகிறார். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். தொலைதூரப் பயணம் நலம் தரும். பொருளாதார நிலை உயரும்.
செய்து வரும் தொழில் விருத்தி அடையும். மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகளும் பட்டங்களும் வாரப் பின்பகுதியில் கிடைக்கும். செவ்வாய், சுக்கிரன், சனி, கேது ஆகியோர் சாதகமாக இல்லாததால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். ஆடவர்களுக்குப் பெண்களால் மதிப்பு குறையும்; எச்சரிக்கை தேவை. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 16.
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 1, 4.
பரிகாரம்: ஏழைப் பெண்களுக்கும், வயோதிகர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும், 9-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 5-ல் சூரியன் இருந்தாலும் தன் உச்ச ராசியில் உலவுவதால் நலம்புரிவார். செவ்வாயும் சனியும் 12-ல் வக்கிரமாக இருப்பது நல்லது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் விழிப்புடன் ஈடுபடவும். அதன் பிறகு சந்திரன் 9, 10-மிடங்களில் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பெரியவர்கள், தனவந்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 6-மிடம் மாறுவது சிறப்பாகும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 18-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று, நேர்கதியில் 9-மிடத்தில் உலவும் நிலை அமைவதால் சுபிட்சம் கூடும்.
அதிர்ஷ்டமான தேதி: மே 16.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: ராகு காலத்தில் துர்கா கவசம் சொல்வதும் கேட்பதும் நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். குரு 8-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வார நடுப்பகுதியில் சந்திரன் ராகுவோடு கூடி 8-மிடத்தில் உலவும் நிலை அமைவதால் 14, 15 தேதிகளில் எதிலும் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும்.
வாரக் கடைசியில் புனிதப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத் துணைவராலும், உற்றார்-உறவினர்களாலும் நலம் ஏற்படும். 14-ம் தேதி முதல் சூரியன் 5-மிடம் மாறுவதும், 18-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதும் சிறப்பாகா. மக்களால் மன வருத்தம் உண்டாகும். பெரியவர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே12, 16 (இரவு).
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை. பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி, குங்குமார்ச்சனை செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். உடல் நலம் சீராகும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். 17, 18 தேதிகள் சோதனையானவை. உடல் நலனில் கவனம் தேவை.
மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 4-மிடம் மாறுவதால் வீண் அலைச்சல் கூடும். உடல் அசைதி உண்டாகும். 18-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று, நேர்கதியில் 7-மிடத்தில் உலவும் நிலை அமைவதால் நல்லவர்களின் தொடர்பால் நலம் பெறலாம். பொருளாதார நிலை உயர வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 16 (முற்பகல்).
திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 8, 9.
பரிகாரம்: துர்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். மக்களால் நலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும்.
வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 3-மிடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். 18-ம் தேதிமுதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று 6-ல் நேர்கதியில் உலவத் தொடங்குவது சிறப்பாகாது. உங்கள் நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 12, 16.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை,இளநீலம், புகைநிறம்.
எண்கள்: 4, 5. 6.
பரிகாரம்: குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை வணங்கி, அவர்களது நல்வாழ்த்துகளைப் பெறவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT