Published : 12 May 2016 12:38 PM
Last Updated : 12 May 2016 12:38 PM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 5-ல்குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நண்பர்கள் உதவுவார்கள். அவற்றால் வருவாயும் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். ராசிநாதன் சனியுடன் கூடி 8-ல் வக்கிரமாக இருப்பதாலும் ஜன்ம ராசியில் புதன் இருப்பதாலும் உடல் நலனில் கவனம் தேவை.
எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. அவசரம் அடியோடு கூடாது. பெற்றோரால் அனுகூலம் பெற வாய்ப்பு உண்டாகும். 14-ம் தேதிமுதல் சூரியன் 2-மிடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 16.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன்நிறம்.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: முருகனையும் திருமாலையும் வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். வாழ்க்கைத் துணைவரால் அளவோடு நலம் ஏற்படும். மக்களால் செலவுகள் கூடும். வீண் அலைச்சல் ஏற்படும். அரசியல், நிர்வாகம், வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது.
கெட்டவர்களின் தொடர்பு கூடாது. நேரான வழியில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். 14-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கண், கால் சம்பந்தமான பிரச்சினைகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 16.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை,இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும், 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு வக்கிரமாக உலவுவது நல்லது. குடும்ப நலம் சீராக இருந்துவரும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். பொருளாதார நிலை உயரும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும்.
வேற்று மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 12-மிடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 18-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதும் நேர்கதியில் 3-மிடத்தில் உலவத் தொடங்குவதும் சிறப்பாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 16.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல்குருவும், 5-ல்செவ்வாயும், 10-ல்சூரியனும் புதனும் சஞ்சரிப்பது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிறரால் புகழப்படுவீர்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை உயரும். பொன்னும் பொருளும் சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 11-மிடம் மாறுவதாலும், 18-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதாலும் செல்வ வளம் பெருகும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 16.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: பொன்நிறம், ஆரஞ்சு, சிவப்பு.
எண்கள்: 1, 3, 5, 9.
பரிகாரம்: துர்கையையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சூரியன் 9-ல் தன் உச்ச ராசியில் உலவுவதாலும், சுக்கிரன் 9-ல் இருப்பதாலும் சுப காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களைப் பாராட்டுவார்கள். ஆதரவாகவும் இருப்பார்கள். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
வாழ்க்கைத் துணைவரால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். தந்தை வழிச் சொத்துக்களும் பொருட்களும் சேரும். 14-ம் தேதி முதல் சூரியன் 10-மிடம் மாறுவதால் புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல மாற்றத்தைக் காணலாம். 18-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் மக்கள் நலம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதி: மே 16.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: நாகேஸ்வரரையும், துர்கை அம்மனையும் வழிபடுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் உண்டாகும். வார நடுப்பகுதியில் பொருட்செலவு அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும்.
வாரக் கடைசியில் செல்வாக்கு உயரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். 14-ம் தேதி முதல் சூரியன் 9-மிடம் மாறுவதும் சிறப்பாகாது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 18-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று, 12-ல் நேர்கதியில் ராகுவுடன் கூடி உலவுவதும் குறை ஆகும். மக்களின் நடத்தையில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 16 (இரவு).
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், இளநீலம்.
எண்கள்: 5, 6, 7.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT