Published : 21 Apr 2016 11:48 AM
Last Updated : 21 Apr 2016 11:48 AM

அருள் மணம் பரப்பும் நூல்கள்

உலகப் புத்தக தினம்: ஏப்ரல் 23

ஆறுமுகப் பெருமானின் திருத்தலங்களில் தனி மகத்துவம் கொண்ட பழநி முருகன் ஞானத்தைப் போதிக்கிறான். முருகப்பெருமான், தானே சென்றமர்ந்த மலை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது பழநி. சுப்ரமணியர், பரம வைராக்யமாக, ஆண்டியாக, தண்டபாணியாக இருக்கிறார். பொதினி, பழனாபுரி, சிவகிரி போன்ற பெயர்களை உடையது பழநி.

இளமையை விரும்புவோருக்குப் பாலமுருகனாகவும், முதிர்ந்த அறிவை விழைவோருக்கு விருத்தனாகவும், சுகபோகங்களை விரும்புவோருக்கு அரசனாகவும், ஞானத்தை நாடுபவர்களுக்கு ஞானதண்டாயுதபாணியாக ஒரே நாளில் தரிசனம் தருகிறான் பழநி ஆண்டவன். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி அன்னாபிஷேகம், ஆடி லட்சார்ச்சனை, நவராத்திரி விழா, திருக்கார்த்திகைத் திருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் பற்றிய செய்திகளும் இப்புத்தகத்தில் காணப்படுகின்றன.

புத்தகம் : அதிசயம் அனேகமுற்ற பழநி

ஆசிரியர் : சித்ரா மூர்த்தி

பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்

தொலைபேசி : 044 42209191

மின்னஞ்சல்: kalbooks@dianakaran.com

விலை : ரூ.100

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சுற்றி அமைந்த திருக்கோயில்களின் வரலாற்றை உள்ளடக்கிய நூல். பல தலங்கள் பலரும் அறியாத ஆனால் சென்று தரிசிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. ஒருதல இறைவன் இறைவி பெயர்களோடு தொடர்புடைய மற்ற தலங்களைப் பற்றிய விவரங்களும் உண்டு.

ஆவணியாபுரத்தில் நரசிம்மர், தாயார் இருவருமே சிம்ம முகத்துடன் காட்சியளிப்பது, வந்தவாசியில் திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளையின் நாகஸ்வரக் கச்சேரி, சுமங்கலியின் கதை, வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகதவர் வரலாறு, ஒழுகூர் மஹாராஜபுரம் பிள்ளையார், மூன்றாவது சீவரம் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சந்திர தோஷம் விலக்கி சந்தோஷம் பெருக வைக்கும் மஹேந்திரவாடி, இழந்த பதவியைத் தரும் மானாம்பதி தலங்களின் பெருமையும் கூறப்பட்டுள்ளது.

புத்தகம் : திருக்கோயில் தரிசனம்

ஆசிரியர் : மஹேந்திரவாடி உமாசங்கரன்

பதிப்பகம் : வானதி பதிப்பகம்

தொலைபேசி : 044 24342810

மின்ன்ஞ்சல் : vanathipathippagam@gmail.com

விலை : ரூ.140

திருப்புகழில் “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்ற முதல் பாடலிலேயே திருமாலின் பெருமை கூறப்படுகிறது. பாற்கடல் வாசம், பாம்பணை நேசம், பஞ்சாயுதங்கள் சிறப்பு, அதில் அம்பெய்துவதைப் பற்றிய குறிப்பு, மகாலட்சுமியின் மாண்பு, வாகனத்தின் மகிமை, மேனியின் வண்ணம், தோளில் அணியும் துளசி மாலை, நான்முகனுக்குத் தந்தையான அவர், காமனுக்கும் தந்தை எனும் விளக்கம், அமுதம் கடைந்தெடுத்த வரலாறு, கஜேந்திரனுக்கு அருள்புரிந்த வரலாறு எனத் திருப்புகழில் பெருமாள் பற்றி பல செய்திகளை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

திருமால் எடுத்த மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், ராம, கிருஷ்ண அவதாரங்கள் குறித்தும் பல சந்தங்களில் அருணகிரிநாதர் பாடியுள்ளார். இதன் மூலம் சைவம் வைணவம் என்ற பேதம் மாறியுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.

புத்தகம் : திருப்புகழில் திருமால்

ஆசிரியர் : டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

பதிப்பகம் : ஆழ்வார்கள் ஆய்வு மையம்

தொலைபேசி : 044 28346505

விலை : ரூ.80

பல நூல்கள், செய்தித் தாள்கள், வெளியீடுகளிலிருந்து சேகரித்த தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர். உணவே மருந்து, பிணி தீர்க்கும் கனி வகைகள், சித்த மருத்துவக் குறிப்புகள், மிளகு ரசம், துளசியின் மகிமை, வாழைக்காயின் சிறப்பு, விருந்து பண்பாடுகள், ஏப்பம் போன்ற தகவல்களைக் கொண்டது.

சுவாமிக்கு வெற்றிலை பாக்கு ஏன், விபூதியின் புனிதமும் பெருமையும், குங்குமப் பொட்டின் மங்களம், தேங்காய் உடைக்கும் முறை, ருத்திராட்சம் அணிவதன் பலன்கள், தீபம் ஏற்றும் முறை, தர்ப்பைப் புல்லின் மகிமை, வாயு வடிவ நவக்கிரகங்கள், பஞ்ச நாத ஸ்தலங்கள், கோயில் தரிசன தத்துவம், ராஜகோபுரம், நந்தியின் குறுக்கே செல்வதைத் தடுப்பது ஏன் போன்ற செய்திகளும் உண்டு.

புத்தகம் : உங்களுக்கு தெரியுமா?

ஆசிரியர் : டாக்டர் எஸ்.சிதம்பரதாணுப் பிள்ளை

பதிப்பகம் : சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி நிலையம்

தொலைப்பேசி : 044 26192906

மின்னஞ்சல் : thanu@eth.net

விலை : ரூ.100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x