Published : 21 Apr 2016 10:18 AM
Last Updated : 21 Apr 2016 10:18 AM
துலாம் ராசி வாசகர்களே
குரு, ராகு 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பு. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். இயந்திரப்பணிகள் ஓரளவு லாபம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் நலம் புரிவார்கள். முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் சில இடர்பாடுகள் ஏற்படும். கண், வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். கலைஞர்கள், மாதர்களால் பிரச்சினைகள் சூழும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் பங்குதாரர்களால் சங்கடம் உண்டாகும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 22 (முற்பகல்), 25.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4.
பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது நல்லது. கணபதிக்குரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுவதும் சிறப்பாகும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் ராசியிலேயே உலவுவது நல்லது. சூரியன், புதன், சுக்கிரன், ராகுவின் சஞ்சாரமும் அனுகூலமாக உள்ளது. குரு வக்கிரமாக உலவுவதும் நலம் தரும் அமைப்பு. முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வாழ்வில் சுபிட்சம் கூடும். பெண்கள், வாழ்க்கைத்துணைவர், தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். ஜன்ம ராசியில் வக்கிர சனியும், 4-ல் கேதுவும் உலவுவதால் உங்கள் நலமும், உங்கள் தாயாரின் நலமும் பாதிக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21 (பகல்), 25.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்: ஹனுமன் சாலீஸா, விநாயகர் அகவல் படிப்பது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 4-ல் சுக்கிரன், 9-ல் குரு உலவுவது சிறப்பு. 5-ல் சூரியன் இருந்தாலும் நலம் புரிவார். சனி வக்கிரமாக இருப்பது நல்லது. முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். பணப் புழக்கம் கூடும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். சுகமும் சந்தோஷமும் பெருகும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு கூடும். வாரப் பின்பகுதியில் சந்திரன், செவ்வாய், சனி ஆகியோருடன் கூடி 12-ல் உலவும் நிலை அமைவதால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. ஜலபயம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 22 (முற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு .
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 4-ல் புதன், 11-ல் செவ்வாய், சனி உலவுவது சிறப்பு. தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தெய்வப்பணிகளிலும், தர்மப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். வியாபார முன்னேற்ற நடவடிக்கைகள் நிறைவேறும். தகவல் தொடர்பு தொழில் லாபம் தரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது நிலை உயரும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் நிலை உயரப் பெறுவார்கள். சட்டம், காவல், ராணுவம், பொறியியல் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 22 (முற்பகல்), 25.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: சர்ப்பேஸ்வரரை வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் திறமை வெளிப்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பணப் புழக்கம் அதிகரிக்கும். முக வசீகரம் கூடும். ஜலப்பொருட்களால் வருவாய் அதிகம் கிடைக்கும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். வாழ்க்கைத் துணைவராலும், தொழில் கூட்டாளிகளாலும் நலம் உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரம், கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21 (இரவு), 25.
திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 8, 9.
பரிகாரம் : தினமும் சிறிது நேரம் தியானம் செய்வது நல்லது. மஹாவிஷ்ணுவுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்வது சிறப்பு. ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவி செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 6-ல் ராகு, 9-ல் செவ்வாய் உலவுவதால் பேச்சில் திறமை கூடும். வசீகர சக்தி உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் வருவாயும் கிடைத்துவரும். மாணவர்களது திறமை வெளிப்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். போக்குவரத்து இனங்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் அதிகம் பாடுபட வேண்டிவரும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. கண், வாய் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 21 (பகல்), 25.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், புகை நிறம்.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT