Published : 28 Apr 2016 01:09 PM
Last Updated : 28 Apr 2016 01:09 PM
துலாம் ராசி வாசகர்களே
குரு, ராகு ஆகியோர் 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பு. தகவல் தொடர்பு இனங்கள் ஓரளவு லாபம் தரும். நண்பர்கள் அளவோடு உதவுவார்கள். நிலபுலங்கள் மூலம் வருவாய் கிடைத்துவரும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இயந்திரப் பணியாளர்கள் வளர்ச்சி காண வழி பிறக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்துவரும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவன்-மனைவி இடையே கருத்தொற்றுமை குறையும். சச்சரவுகள் கூடும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது. அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2, 4 (முற்பகல்).
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4.
பரிகாரம்:
விநாயகர் அகவல் படிப்பது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சூரியனும், புதனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குரு 10-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். குடும்பத்தில் அமைதி காண வழி பிறக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். பண வரவு சீராக இருந்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் நலம் புரிய முன்வருவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தாய் நலனிலும் அக்கறை தேவை. சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. சுக்கிர பலம் குறைந்திருப்பதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2, 4 (முற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 1, 4, 5, 9.
பரிகாரம்:
விநாயகர், ஆஞ்சநேயர், மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும், 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. 5-ல் சூரியன் இருந்தாலும் தன் உச்ச ராசியில் உலவுவதால் நலம் புரிவார். சனி வக்கிரமாக இருப்பது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராக இருந்துவரும். செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாளைய எண்ணங்கள் ஈடேறும். பேச்சில் திறமை வெளிப்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். நிலபுலங்கள் சேரும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். சுகமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். வீண் செலவுகள் குறையும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2, 4 (முற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பு. குரு 8-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். குடும்ப நலம் சீராகும். வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத் துறைகள் ஊக்கம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடவும் அவற்றில் வெற்றி பெறவும் வாய்ப்புக்கூடிவரும். பொதுநலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். சுகமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். குடும்பத்தில் கலகம் உண்டாகும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2, 4 (முற்பகல்).
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகர் வழிபாடு அவசியம்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும்; சுக்கிரனும், 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும்; சனியும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். எதிரிகள் ஏமாந்துபோவார்கள். போட்டி, பந்தயங்களிலும் வழக்கு வியாஜ்ஜியங்களிலும் விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். சுப செலவுகள் கூடும். அலைச்சலும் உழைப்பும் வீண்போகாது. புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை கூடும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மன உறுதி அதிகமாகும். நல்லவர்களின் தொடர்பு பயன்படும். மேலதிகாரிகளின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். ஜன்ம ராசியில் கேதுவும், கோபத்தைக் குறைத்துக்கொள்வது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 2, 4 (முற்பகல்).
திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 8, 9.
பரிகாரம்:
விக்னேஸ்வரரை வழிபடவும் .
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 6-ல் ராகுவும், 9-ல் செவ்வாயும் உலவுவதால் பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத்திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கை நிகழும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கூடும். பிள்ளைகளால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். சூரியன், சனி, கேதுவின் நிலை சிறப்பாக இல்லாததால் கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 29, மே 4 (முற்பகல்).
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், புகை நிறம்.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT