Published : 26 Mar 2021 01:52 PM
Last Updated : 26 Mar 2021 01:52 PM
சுக்கிர வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வழிபடுவோம். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பாள் மகாலக்ஷ்மி. மங்காத ஐஸ்வரியங்கள் அனைத்தையும் தந்தருளுவாள் தாயார்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். பெண் தெய்வங்களுக்கு உரிய தினங்கள். கிராம தெய்வங்களை வணங்குவதற்கு உரிய நாள். இந்தநாட்களில், அம்பாளை வணங்கி வருவது மிகுந்த நன்மைகளைத் தரும்.
அம்பாளின் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடலாம். அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். மகாலக்ஷ்மித் தாயாரை கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி வழிபடுவது வளமான எதிர்காலத்தைக் கொடுக்கும் என்பார்கள்.
சுக்கிரவாரம் என்று வெள்ளிக்கிழமையைச் சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமை நன்னாள் என்பதே வழிபாடுகளும் பூஜைகளும் செய்வதற்கு உரிய நாளாகவே போற்றப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் எண்ணிலடங்காத பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
பங்குனி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகளுக்கு உரிய மாதம். குலதெய்வ வழிபாட்டுக்கான மாதம். பெண் தெய்வங்களை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள்.
செவ்வாயிலும் வெள்ளியிலும் மறக்காமல் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவது மங்காத செல்வங்களையெல்லாம் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வெள்ள்ளிக்கிழமையில், மாலையில் விளக்கேற்றுங்கள். அம்பாளை வழிபடுங்கள். மகாலக்ஷ்மி தாயாரை ஆராதனை செய்யுங்கள். பெண் தெய்வங்களை வழிபட்டு பிரார்த்தனை செய்யுங்கள். வாசலில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் நெய் விளக்கேற்றுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வோம். சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து மனதார வேண்டிக்கொள்வது மங்கல காரியங்களை நடத்திக் கொடுக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே இருந்த கருத்துவேற்றுமை விலகும். கடன் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு அருளுவாள் மகாலக்ஷ்மி தாயார். மங்காத ஐஸ்வரியங்களையும் தருவாள் தாயார்.
பங்குனி மாத சுக்கிர வாரத்தில், அற்புதமான வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மி தாயாரை மனதார வழிபடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT