Last Updated : 24 Mar, 2021 05:28 PM

 

Published : 24 Mar 2021 05:28 PM
Last Updated : 24 Mar 2021 05:28 PM

பங்குனி உத்திரம் ; ஐயன் ஐயப்பனுக்கு அவதார பூஜை! 

ஸ்ரீஐயப்ப சுவாமி, மணிகண்ட சுவாமியாக மண்ணில் அவதரித்த நன்னாளான பங்குனி உத்திர திருநாளில், அருகில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் சென்று ஐயன் ஐயப்பனை கண்ணாரத் தரிசிப்போம். சாஸ்தா என்றும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி என்றும் போற்றப்படும் ஸ்ரீமணிகண்டனுக்கு பங்குனி உத்திரநாளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொள்வோம். பங்குனி உத்திர நாள்தான், ஸ்ரீஐயப்ப ஸ்வாமி அவதரித்த தினம் என்பதால், இந்த நாளில் காலை முதல் இரவு வரை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

சபரிமலை நாதன், சபரிகிரிவாசன், ஐயப்ப சுவாமி என்றெல்லாம் அழைக்கப்படும் ஐயப்ப சுவாமிக்கு சாஸ்தா என்றும் பெயர் உண்டு. மணிகண்ட சுவாமியாக அவதரித்தார் என்கிறது புராணம்.

கார்த்திகை மாதத்தில் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு இருமுடி சுமந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப சுவாமியைத் தரிசிப்பது வழக்கம். மாதந்தோறும் தமிழ் மாதப் பிறப்பின் போது சபரிமலை நடை திறப்பு நிகழும்,. அதையொட்டி, சபரிமலைக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல், சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் என தமிழகத்தின் பல ஊர்களிலும் ஐயன் ஐயப்ப சுவாமிக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களுக்கும் சென்று, சாஸ்தாவை, ஐயப்பனை, மணிகண்ட சுவாமியை வணங்கி வரும் ஐயப்ப பக்தர்கள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஐயப்பனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும். அதேபோல, ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம் உத்திரம். எனவே, மாதந்தோறும் உத்திர நட்சத்திர நன்னாளில், ஐயப்ப சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசித்து வேண்டிக்கொண்டால், நம்முடைய தோல்விகளையெல்லாம் வெற்றிகளாக மாற்றித் தந்தருளுவார் ஐயப்ப சுவாமி. இதுவரை இருந்த காரியத் தடைகளையெல்லாம் நீக்கி அருளுவார் என்கின்றனர் பக்தர்கள்.

மாதந்தோறும் வருகிற உத்திரம் விசேஷம் என்றாலும் பங்குனி மாதத்தில் வருகிற உத்திரம் என்பது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. பங்குனி உத்திர நாளில்தான், ஐயப்ப சுவாமி, மணிகண்டனாக அவதரித்தார் என்கிறது ஐயப்ப சுவாமி புராணம். மேலும் சபரிமலை ஸ்தல புராணமும் பங்குனி உத்திரத்தையும் அதன் மகிமையையும் விவரித்துள்ளது.

சாஸ்தா என்றும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி என்றும் போற்றப்படும் ஸ்ரீமணிகண்டனுக்கு பங்குனி உத்திரநாளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொள்வோம். பங்குனி உத்திர நாள்தான், ஸ்ரீஐயப்ப ஸ்வாமி அவதரித்த தினம் என்பதால், இந்த நாளில் காலை முதல் இரவு வரை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீஐயப்பன் திருக்கோயிலில் அதிகாலையில் இருந்தே ஐயப்ப பக்தர்கள் வரத்துவங்கிவிடுவார்கள். அப்போது ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு சந்தனம் முதலான திரவியங்களைக் கொண்டு உத்திர நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் விமரிசையாக நடைபெறும். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில், திருச்சி ஐயப்பன் ஆலயம், அம்பத்தூரில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறும்.

ஐயப்பனின் திருநட்சத்திரம் மற்றும் திரு அவதார நன்னாளையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று ஐயப்பன் கோயில்களில் கூடி, ஐயப்பனை தரிசிப்பார்கள்.

ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x