Published : 26 Nov 2015 11:50 AM
Last Updated : 26 Nov 2015 11:50 AM
கல்விக்கு சரஸ்வதி தேவி, செல்வத்துக்கு லட்சுமி தேவி, வீரத்துக்கு பார்வதி தேவி, ஞானத்துக்கு தட்சிணாமூர்த்தி, பகை அகல துர்காதேவி, காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயர் என்று சொல்லப்படுகிற வரிசையில் நோய் தீர்க்கும் கடவுளாக மாமருத்துவராக வணங்கப்படுகிறார் ஸ்ரீ தன்வந்திரி பகவான். இந்த உலகின் ஆதி மருத்துவக் கடவுளாக தன்வந்திரி பகவானைப் போற்றிப் புகழ்கின்றன புராண நூல்கள்.
இப்படியான சிறப்புகளைப் பெற்ற தன்வந்திரிக்கு, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுராவில் உள்ள, கீழ்புதுப்பேட்டையில் ஆலயமொன்று அமைந்துள்ளது. இதனை நிறுவியவர் ஸ்ரீ முரளிதர சுவாமிகள்.
மூலிகை வனம், கோசாலை, ஆயுர்வேத மருத்துவம், யோக மையம், தியான மண்டபம், அன்னதான கூடம், பிரார்த்தனை கூடம் ஆகியவை மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்வியல் ஆராய்ச்சி மையமாகவும், ஷன்மத பீடமாகவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் அமைந்துள்ள. இங்குள்ள ஸ்ரீஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி திருக்கோயிலில் 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலை 7.32 மணி முதல் 9.44 மணிவரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும் இதர 73 பரிவார தெய்வங்களுக்கும், 468 சிவலிங்க ரூபமாக உள்ள சித்தர்களுக்கும் ஏக காலத்தில் இந்த மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெறும்.
கௌமாரத்தில் ஸ்ரீ பாலமுருகன், கார்த்திகை குமரன். சௌரத்தில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், சூரியன், சந்திரன், ஸ்ரீ காலச்சக்கரம் ஆகிய ஷன்மத தெய்வங்கள், சித்த புருஷர்கள், மகான்கள் ஆகியோருக்கு இந்த தன்வந்திரி பீடத்தில் சிலைகள் அமைக்கப்பட்டு முறையான பூஜைகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கால பைரவர் மகா அஷ்டமி விழா
கால பைரவர் மகா அஷ்டமி விழா 03.12.15 அன்று மாலை 3 மணி முதல் 8 மணி வரை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் நடைபெறவுள்ளது.
கால பைரவருக்கு 15-ம் ஆண்டு காலாஷ்டமி பெருவிழா, ஸ்ரீ கால பைரவர் வைரவன் கோயிலில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 02.12.15 ம் தேதி புதன் கிழமையன்று, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. 03.12.15 வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள பூஜைகளில் 108 வலம்புரி சங்காபிஷேகம் உட்பட யாக பூஜைகள் நடைபெறும்.
ஸ்ரீயாக்ஞ்வல்க்ய ஜெயந்தி மஹோத்ஸ்வம்
27.11.15 முதல் 29.11.15 வரை, மூன்று நாட்களுக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீயாக்ஞ்வல்கிய சபாமண்டபத்தில் நடைபெற உள்ளது. இதே இடத்தில் இம்மாதம் 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை, பிரதி தினமும் காலை ஸ்ரீ காயத்ரி மாதாவிற்குக் கோடி அர்ச்சனை செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT