Published : 14 Mar 2021 05:47 PM
Last Updated : 14 Mar 2021 05:47 PM

பழநி கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 22 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


தீர்த்தக்காவடிக்கு புகழ்பெற்ற பங்குனி உத்திரத்திருவிழா மார்ச் 22 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயில் பங்குனி உத்திரவிழா மார்ச் 22 ம் தேதி

காலை 10.20 மணிக்கு பழநி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் ஆறாம்நாள் சுவாமி திருக்கல்யாணம் மார்ச் 27 ம் தேதி இரவு 7.15 மணிக்கும், இதைத்தொடர்ந்து வெள்ளித்தேரோட்டம் அன்று இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 28 ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. மார்ச் 31 ம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழாற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதருவது குறித்த ஆலோசனைக்கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

பக்தர்களின் வசதிக்காக பழநி பேருந்துநிலையம், கோயில் அலுவலகம், ரயில்நிலையம் ஆகிய இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் அலுவலகத்தில் பக்தர்களின் அவசர உதவிக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 1800 425 9925, 04545-240293 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்.

பொதுசுகாதாரத்துறை மூலம் பக்தர்களின் அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவமுகாம் அமைக்கப்படவுள்ளது. பக்தர்கள் நீராடும் இடும்பன்குளம், சண்முகநதியில் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர், என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி, கோயில் இணைஆணையர் (பொறுப்பு) குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார், பழநி கோட்டாட்சியர் ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x