Published : 13 Mar 2021 09:01 AM
Last Updated : 13 Mar 2021 09:01 AM
ஒவ்வொரு நாளும் திதியாகவோ நட்சத்திரமாகவோ நல்ல நல்ல நாட்களாக, விசேஷங்களாக, வழிபாட்டுக்கு உரிய தினமாக, விழாக்களுக்கும் விரதங்களுக்கும் உரிய நாட்களாக அமைகின்றன.
இந்த வாரத்தில், 13ம் தேதி அமாவாசை. சனிக்கிழமை. மாசி அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வருவது விசேஷம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி கோயிலில் தங்கச் சூரிய பிரபையில் திருக்கோலம்.
14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரடையான் நோன்பு. பெண்கள் விரதம் இருந்து கணவருக்காக பிரார்த்தனை செய்யும் நாள். பிரதமை. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில், தெப்போத்ஸவ விழா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி பரமபதநாதன் திருக்கோலக் காட்சி.
15ம் தேதி திங்கட்கிழமை, துவிதியை திதி நாள். நெல்லை கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவைப் பெருவிழா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி கோயிலில் வைரமுடி சேவை திருக்கோலம்.
16ம் தேதி செவ்வாய்க்கிழமை, த்ரிதியை நாள். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி கோயிலில் காளிங்க நர்த்தன திருக்கோலக் காட்சி. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு உத்ஸவப் பெருவிழா. கும்பகோணம் சுவாமிமலையில் முருகக் கடவுளுக்கு பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளும் திருக்காட்சி.
17ம் தேதி புதன்கிழமை, சதுர்த்தி நாள். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் உத்ஸவ விழா. திருப்பது ஸ்ரீஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கல்யாண வைபவம்.
18ம் தேதி வியாழக்கிழமை, பஞ்சமி திதி நாள். கார்த்திகை விரதம். நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தில் உத்ஸவம் ஆரம்பம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி சூர்ணோத்ஸவம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயிலில் ராஜாங்க சேவை திருக்கோலக் காட்சி.
19ம் தேதி வெள்ளிக்கிழமை, சஷ்டி. முருகக் கடவுளுக்கு உரிய நாள். நெல்லையப்பர் கோயில் சுவாமி புறப்பாடு, உத்ஸவம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயிலில் கிருஷ்ணாவதாரத் திருக்கோலக் காட்சி.
இந்த வாரத்தில் பஞ்சமி திதியில் வாராஹி வழிபாடு செய்யலாம். கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். சஷ்டியில் முருகக் கடவுளைத் தரிசிக்கலாம் என்கிறார் சுந்தரேச சிவாச்சார்யர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT