Published : 09 Mar 2021 10:42 AM
Last Updated : 09 Mar 2021 10:42 AM
மாசி ஏகாதசியில் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டுவோம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். மங்காத செல்வம் தந்தருள்வார் வேங்கடவன். அருகில் உள்ள விஷ்ணு ஆலயம் செல்வோம். துளசி தீர்த்தம் பருகுவோம். அலங்காரப் பிரியனான அனந்தனை, மகாவிஷ்ணுவை, வேங்கடவனைப் போற்றித் துதிப்போம். சகல ஐஸ்வரியங்களும் தந்தருளுவார் பெருமாள்.
மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது பூஜைகளுக்கும் மந்திர ஜபங்களுக்கும் உகந்த மாதம். மாசி மாதம் முழுக்கவே விளக்கேற்றி தினமும் பூஜைகள் மேற்கொள்ளலாம்.
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் விசேஷம். மாசி மாதத்தில், மகா சிவராத்திரி விசேஷம். எல்லா மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மகம்தான் மகத்துவமானது. எல்லா மாதமும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
அதேபோல், மாசி மாதத்தில் சிவாலயம், பெருமாள் கோயில் என பல ஆலயங்களில் பிரம்மோத்ஸவ விழாவும் தீர்த்தவாரி பெருவிழாவும் விமரிசையாக நடைபெறும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் மாசிப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது மாசி மக நன்னாளில், தெப்போத்ஸவமும் திருக்குளத்தில் விளக்கேற்றி வழிபடுகிற வைபவமும் சிறப்புற நடைபெறும்.
மாசி மாதத்தில் வழிபடுவதை மேற்கொள்வது சிறந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மாசி மாதத்தில் வருகிற ஏகாதசி நன்னாளில், பெருமாளுக்கு விரதம் மேற்கொள்வது விசேஷம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்து கொள்வது அளவற்ற பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
9ம் தேதி செவ்வாய்க்கிழமை ஏகாதசி. இந்த நன்னாளில், வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு தீபமேற்றி, துளசி சார்த்தி வேண்டுவோம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் மங்கல காரியங்களுக்கு இருந்த தடைகளை நீக்கும். தொழிலில் மேன்மையையும் லாபத்தையும் தந்தருளுவார் ஏழுமலையான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அருகில் உள்ள விஷ்ணு ஆலயம் செல்வோம். துளசி தீர்த்தம் பருகுவோம். அலங்காரப் பிரியனான அனந்தனை, மகாவிஷ்ணுவை, வேங்கடவனைப் போற்றித் துதிப்போம். சகல ஐஸ்வரியங்களும் தந்தருளுவார் பெருமாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT