Last Updated : 05 Mar, 2021 10:25 AM

 

Published : 05 Mar 2021 10:25 AM
Last Updated : 05 Mar 2021 10:25 AM

சுக்கிர யோகம் தருவாள் மகாலக்ஷ்மி

மாசி மாதத்தின் வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை வழிபடுவோம். சுக்கிர யோகத்தைத் தந்தருளுவாள் மகாலக்ஷ்மி தாயார். மாலை வேளையில், வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றுவோம். குடும்பத்தினர் அனைவருமாக சேர்ந்து அம்மன் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்வதும் வெண்மை நிற மலர்கள் சார்த்தி அனைவரும் சேர்ந்து நமஸ்கரித்து வேண்டுவதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்திடுவாள் மகாலக்ஷ்மி தாயார்.

சுக்கிர வாரம் என்று வெள்ளிக்கிழமையைச் சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமை என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கான அற்புதமான நன்னாள். சக்தியை வணங்குவதற்கு உரிய அற்புத நாள். காமாட்சி அன்னையாகவும் காளிகாம்பாளாகவும் கற்பகாம்பாளாகவும் கருமாரியம்மனாகவும் வீற்றிருக்கிறாள் அம்பாள். கோமதி அன்னையாக, காந்திமதி அம்பாளாக, மீனாட்சித் தாயாக, அகிலாண்டேஸ்வரி அன்னையாக பலப்பல திருநாமங்களுடன் பலவிதக் கோலங்களுடன் காட்சி தருகிறாள் அம்பிகை.

மேலும் மாரியம்மன் முதலான கிராம தெய்வங்களாகவும் போற்றி வணங்கப்படுகிறாள் சக்தி. மாசி மாதம் என்பது மகத்துவமான மாதம். மங்கல காரியங்கள் செய்வதற்கு உண்டான மாதம். பூஜைகளும் ஹோமங்களும் செய்து இறை சக்தியை பிரார்த்தனை செய்து கொள்ளும் மாதம் என்றெல்லாம் போற்றுகிறது சாஸ்திரம்.

அதேபோல், முக்கியமாக, மகாலக்ஷ்மியை வணங்கக் கூடிய நாளாக வெள்ளிக்கிழமையைச் சொல்லுவார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். சுக்கிர வாரம் என்று சொல்லப்படுகிற வெள்ளிக்கிழமையை, மகாலக்ஷ்மி தாயாரை வணங்கிப் போற்றுவதும், பாயசம் முதலான நைவேத்தியங்கள் செய்து வேண்டுவதும் மிகுந்த பலன்களைத் தரும்.

மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வோம். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வோம். வெண்மை நிற மலர்களால் மகாலக்ஷ்மியை அலங்கரித்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். அல்லல்களையெல்லாம் போக்கி அருளுவாள் மகாலக்ஷ்மி தாயார்.

வைஷ்ண திருத்தலங்களில் இருக்கும் தாயார் சந்நிதியில் மனமுருகி நம் வேண்டுதலை வைப்போம். கண் குளிர தரிசித்து மனம் குளிர பிரார்த்தனைகள் செய்வோம். சுக்கிர யோகத்தைத் தந்திடுவாள். சுபிட்சம் தந்திடுவாள். துக்கத்தையும் கடன் முதலான பிரச்சினைகளையும் விரட்டியடுத்து அருளிடுவாள் மகாலக்ஷ்மி தாயார்.

மாலை வேளையில், வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றுவோம். குடும்பத்தினர் அனைவருமாக சேர்ந்து அம்மன் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்வதும் வெண்மை நிற மலர்கள் சார்த்தி அனைவரும் சேர்ந்து நமஸ்கரித்து வேண்டுவதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்திடுவாள் மகாலக்ஷ்மி தாயார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x