Published : 05 Mar 2021 09:32 AM
Last Updated : 05 Mar 2021 09:32 AM
மாசி வெள்ளிக்கிழமையில் ராகுகால வேளையில் வழிபாடு செய்வோம். துர்கைக்கு தீபம் ஏற்றுவோம். துக்கத்தையெல்லாம் போக்கியருளுவாள் துர்காதேவி.எலுமிச்சை தீபம் ஏற்றுவோம். செவ்வரளி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வோம். மங்காத செல்வங்களைத் தந்தருள்வாள். துக்கத்தையும் வாட்டத்தையும் போக்கி வாழ்க்கையை மலரச் செய்வாள் துர்காதேவி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது கலைகளைக் கற்றறிவதற்கான மாதம். மாசி மாதம் என்பது கல்வியில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் படித்து முன்னுக்கு வருவதற்கான காலம். மாசி மாதத்தில் வருகிற மகம் சிறப்பு வாய்ந்தது.
அதேபோல், மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம்தான் என்றபோதும் மாசி மாதத்தில் வருகிற மகா சிவராத்திரி அன்று விரதமிருந்து பூஜையைத் தரிசிப்பது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதத்தில்தான் பல ஆலயங்களில் உத்ஸவ திருமேனிகள் திருவீதியுலா வருவார்கள். தீர்த்தவாரிப் பெருவிழா நடைபெறும். பிரம்மோத்ஸவ விழா மாசிப்பெருந்திருவிழா என்றெல்லாம் கோயில்கள் களை கட்டும்.
மாசி மாதத்தின் பெளர்ணமியும் சிறப்புக்கு உரியது. மாசி மாதம் முழுவதுமே தீர்த்த நீராடுவது ஏழு ஜென்ம பாவங்களைப் போக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.
மாசி மாதத்தில் சக்தி வழிபாடு அளப்பரிய பலன்களைக் கொடுக்கும் என்பது ஐதீகம். மாசிச் செவ்வாயில் முருகக் கடவுளையும் அம்பாளையும் வழிபடுவது வளமான எதிர்காலத்தைத் தந்தருளும். அதேபோல், மாசி வெள்ளிக்கிழமையும் மகத்துவம் நிறைந்தது என்கிறார்கள் பக்தர்கள்.
மாசி வெள்ளிக்கிழமையில், ராகுகால வேளையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று துர்கையின் சந்நிதியில் மனதார வேண்டிக்கொள்வோம். எலுமிச்சை தீபம் ஏற்றுவோம். செவ்வரளி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வோம். மங்காத செல்வங்களைத் தந்தருள்வாள். துக்கத்தையும் வாட்டத்தையும் போக்கி வாழ்க்கையை மலரச் செய்வாள் துர்காதேவி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT