Last Updated : 03 Mar, 2021 04:16 PM

 

Published : 03 Mar 2021 04:16 PM
Last Updated : 03 Mar 2021 04:16 PM

அஷ்டகம் சொன்னால் கஷ்டங்கள் விலகும்; ஸ்ரீதட்சிணாமூர்த்தி மகிமை! 

தட்சிணாமூர்த்தி, தென்முகக் கடவுள் என்று போற்றப்படுகிறார். தட்சிணம் என்றால் தெற்கு என்று அர்த்தம். சிவ வடிவங்களில் மிக முக்கியமானதொரு வடிவமாக தட்சிணாமூர்த்தியைச் சொல்லுவார்கள் சிவனடியார்கள். கல்லால மரத்தடியில் அமர்ந்துகொண்டு, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளும் தட்சிணாமூர்த்தி, ஞானகுருவாகவும் யோக குருவாகவும் திகழ்கிறார்.

சிவனடியார்களிடையே ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பிரசித்தம். இந்த அஷ்டகத்தைச் சொல்லி குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

அகணித குணகணம ப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

என்று சொல்லி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை நமஸ்கரிப்போம். தொடர்ந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லுவோம்.
.
நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
.
த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

.
அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

.
த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
.
யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

.
ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!

தட்சிணாமூர்த்தி அஷ்டகம் என்று சிலாகிக்கிறது தர்ம சாஸ்திரம். இந்த அஷ்டகத்தை தினமும் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில், அவசியம் இந்த அஷ்டகத்தைச் சொல்லி பாராயணம் செய்து, தட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக் கொள்வது எண்ணற்ற பலன்களை வழங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். எடுத்த காரியத்தில் தெளிவையும் வெற்றியையும் தந்தருளுவார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x