Published : 21 Feb 2021 05:23 PM
Last Updated : 21 Feb 2021 05:23 PM
மாசி சோம வாரத்தில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வோம். சிவனாரைத் தரிசிப்போம். மாசி சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தால், சிக்கல்களைத் தீர்த்து வைப்பார். குழப்பங்களைப் போக்கி அருளுவார் என்பது ஐதீகம். மாசி சோம வார நன்னாளில், அற்புதமான வளர்பிறை திங்கட்கிழமையில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வோம். சிவனாருக்கு செவ்வரளியும் வில்வமும் சார்த்தி வேண்டிக்கொள்வோம். மனதின் குழப்பத்தையெல்லாம் போக்கியருளுவார் சிவபெருமான். துக்கங்கள் அனைத்தையும் நீக்கித் தந்து, புதியதொரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்திடுவார் தென்னாடுடைய சிவனார்!
சோமவாரம் என்று திங்கட்கிழமையைச் சொல்லுவார்கள். சோமன் என்றால் சந்திரன் என்று அர்த்தம். திங்கள் என்றாலும் சந்திரன் என்றே பொருள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான்.
தலையில் கங்கையைச் சூடிக் கொண்டும், பிறையை அணிந்து கொண்டுமாக இருக்கிறார் ஈசன். அதனால்தான் சிவபெருமானுக்கு சோமநாதீஸ்வரர், சோமசுந்தரர், சந்திரசூடேஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்துள்ளன.
எனவே, சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்வதும் சிவனாரைத் தரிசிப்பதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். அதேபோல், சிவாலயத்தின் தூய்மைப் பணியில் பங்கேற்பதும் நம் பாவங்கள் அனைத்தையும் போக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திங்கட்கிழமை என்பது சிவனாருக்கு விசேஷமான நாள். அதேபோல், மாசி மாதம் என்பதும் மகத்தான மாதம். வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகள் செய்வதற்கும் கல்வியையும் கலைகளையும் கற்றத் தொடங்குவதற்கும் ஏற்ற மாதம்.
அதுமட்டுமா? உபநயனம் முதலான விசேஷங்களை மாசி மாதத்தில் செய்வது இன்னும் மகோன்னதமானது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இந்த மாசி மாதமும் சோமவாரமும் கொண்ட நாளில், சிவ தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. ருத்ரம் ஜபித்துப் பாராயணம் செய்யலாம். சிவபுராணம் வாசிக்கலாம். நாயன்மார்களின் சரிதங்களைப் படித்து ஈசனை வணங்கலாம்.
மாசி சோம வார நன்னாளில், அற்புதமான வளர்பிறை திங்கட்கிழமையில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வோம். சிவனாருக்கு செவ்வரளியும் வில்வமும் சார்த்தி வேண்டிக்கொள்வோம். மனதின் குழப்பத்தையெல்லாம் போக்கியருளுவார் சிவபெருமான். துக்கங்கள் அனைத்தையும் நீக்கித் தந்து, புதியதொரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்திடுவார் தென்னாடுடைய சிவனார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT