Last Updated : 16 Feb, 2021 11:53 AM

 

Published : 16 Feb 2021 11:53 AM
Last Updated : 16 Feb 2021 11:53 AM

வசந்த பஞ்சமி; மாசி செவ்வாய்; துர்கை வழிபாடு! 

வசந்த பஞ்சமியில் மாசி செவ்வாய்க்கிழமையில் துர்கையை ராகுகாலத்தில் வழிபடுவோம். துக்கம் பறந்தோடும். கவலைகள் காணாமல் போகும். கஷ்டங்கள் நீங்கும். இனி எல்லாமே நல்லகாலமாக அமையும் என்பது ஐதீகம்.

தை அமாவாசைக்குப் பின்னர் அடுத்த நாளில் இருந்து சியாமளா நவராத்திரி தொடங்கும். இந்த ஒன்பது நாளும் மிகவும் விசேஷமான நாட்கள். அதேபோல், தை மாத அமாவாசையில் இருந்து மாசி மாத அமாவாசையிலான நாட்கள், மாக மாதம் என்று அழைக்கப்படுகிறது.
ஆக, மாசி மாதம் என்பதே முழுமையான மாதமாகவும் முக்கியமான மாதமாகவும் போற்றப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாதமாகவும் பூஜைகளுக்கு உரிய மாதமாகவும் வணங்கப்படுகிறது.

மாசி மாதமும் விசேஷம். மாசி மாதத்தில் சியாமளா நவராத்திரி காலமும் சிறப்புக்கு உரியது. இந்தநாட்களில் வருகிற செவ்வாய்க்கிழமை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல், பஞ்சமி திதியும் வலிமை மிக்கது. அப்படியிருக்க, செவ்வாய்க்கிழமையும் பஞ்சமி திதியும் இணைந்து வருவது இன்னும் மகத்துவமும் மகிமையும் நிறைந்ததாகத்தானே இருக்கும்?

பஞ்சமி திதி.சுக்ல பட்ச பஞ்சமி திதி. செவ்வாய்க்கிழமை. மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமை. இவையெல்லாம் இணைந்து வருகிற நாளில், துர்கையை மறக்காமல் வழிபடவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய்க்கிழமை அன்று ராகுகாலம் என்பது மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை. இந்த ராகுகால வேளையில், வீட்டில் விளக்கேற்றுங்கள். துர்கையின் ஸ்லோகம் சொல்லுங்கள். துர்கை காயத்ரி சொல்லி வழிபடுங்கள்.

முக்கியமாக துர்கையின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவது இன்னும் வளமும் நலமும் தந்து நம்மைக் காக்கும் என்கிறது சாஸ்திரம்.

ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே
ரட்சிணி ஸ்வாஹ;

என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி, துர்கைக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை, உங்கள் வேண்டுதல்களை, உங்கள் மனக்குறைகளை அவளிடம் சொல்லி முறையிடுங்கள். ஒரு தாயின் கனிவுடனும் கருணையுடனும், உங்களுக்கு அருளுவாள் துர்காதேவி.

அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றும் துர்கையைத் தரிசிக்கலாம். துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடலாம். ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடலாம். இன்னல்களையெல்லாம் களைந்தெடுப்பாள். எதிர்ப்புகளையும் இல்லாமல் செய்வாள் தேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x