Published : 15 Feb 2021 04:38 PM
Last Updated : 15 Feb 2021 04:38 PM
வளர்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியை வழிபடுவோம். சியாமளா நவராத்திரி காலமான இந்த நாட்களில், அம்பிகையை ஆராதிப்போம். அல்லல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பாள் தேவி. ராஜமாதங்கி என்று சொல்லப்படுகிற தேவியின் நவராத்திரி காலகட்டத்தில், வாராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். வீட்டில் இருந்தபடியே வாராஹிதேவியின் காயத்ரியையும் மூலமந்திரத்தையும் 108 முறை ஜபித்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
அமாவாசை என்பதே விசேஷம்தான். அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை என மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவை. தை அமாவாசையில் இருந்து மாசி அமாவாசை வரையிலான காலதை மாக மாதம் என்பார்கள்.
தை அமாவாசைக்குப் பின்னர் அடுத்தடுத்த நாட்கள் சியாமளா நவராத்திரி என்று பெயர். இந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதிப்பதும் அம்பாளுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லிப் பாராயணம் செய்வதும் மிக மிக வலிமையையும் சக்தியையும் தரும் என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள்.
தை அமாவாசைக்குப் பின்னர் வளர்பிறை காலத்தில் வருகிற பஞ்சமி திதியானது ரொம்பவே அதிர்வுகள் கொண்ட நாளாக அமைந்திருக்கிறது. பஞ்சமி திதி என்பதே சப்த மாதர்களில் ஒருத்தியும் அம்பிகையின் படைத்தலைவியாக, படைத்தளபதியாகத் திகழும் வாராஹி தேவிக்கு உரிய திதி. எதிர்ப்புகளையும் துஷ்ட சக்திகளையும் அழித்தொழிக்கும் கோபக்காரி வாராஹிதேவி. சப்தமாதர்களில், நடுநாயகமாகக் காட்சி தருவாள் வாராஹி தேவி.
வாராஹிக்கு தனிக்கோயில்களும் அமைந்துவிட்டன. வாராஹியை வழிபடும் அன்பர்களும் பெருகிக்கொண்டிருக்கின்றனர்.
சுக்லபட்ச பஞ்சமி திதியில், ராஜமாதங்கி என்று சொல்லப்படுகிற tதேவியின் நவராத்திரி காலகட்டத்தில், வாராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். வீட்டில் இருந்தபடியே வாராஹிதேவியின் காயத்ரியையும் மூலமந்திரத்தையும் 108 முறை ஜபித்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
அதேபோல், சியாமளா நவராத்திரி காலத்தில்.... ராஜமாதங்கி நவராத்திரி காலத்தில் பஞ்சமி திதியில் உக்கிரமான பெண் தெய்வங்களை தரிசிப்பதும், வழிபடுவதும், எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும். காரியத்தடைகளையெல்லாம் நீக்கி அருளுவாள் தேவி என்று சாக்த உபாஸகர்கள் போற்றுகின்றனர்.
16ம் தேதி செவ்வாய்க்கிழமை, சுக்லபட்ச பஞ்சமி. வளர்பிறை பஞ்சமி. இந்த நன்னாளில், வாராஹியையும் வ்ழிபடுவோம். உக்கிர பெண் தெய்வங்களையும் தரிசித்து வேண்டுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT