Published : 12 Feb 2021 10:46 AM
Last Updated : 12 Feb 2021 10:46 AM
துக்கத்தையும் தோல்வியையும் போக்கி நம்மை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் துர்கையின் ஸ்லோகத்தைச் சொல்லுவோம். சுபிட்சமான வாழ்வுக்கு நம் குடும்பத்தை உயர்த்தி அருளுவாள் தேவி. கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கச் செய்வாள் துர்காதேவி.
கோஷ்டம் என்று ஆலயத்தில் ஒரு பகுதி உண்டு. சிவ சந்நிதியையும் அம்பாள் சந்நிதியையும் சுற்றியுள்ள பகுதியே கோஷ்டமாகும். பிராகாரத்தில் சுவாமியின் கருவறையைச் சுற்றியுள்ள கட்டடத்தில் கோஷ்ட தேவதைகள் சந்நிதி கொண்டிருப்பார்கள்.
எல்ல சிவாலயங்களிலும் பிள்ளையாருக்கு தனிச்சந்நிதி இருந்தாலும் கோஷ்டத்தில் நர்த்தன விநாயகரைத் தரிசிக்கலாம். அதேபோல், தென்முகமாக தட்சிணாமூர்த்தி காட்சி அளிப்பார். அதனால்தான் தட்சிணாமூர்த்தி என்றே திருநாமம் அமைந்தது அவருக்கு. தட்சிணம் என்றால் தெற்கு.
அதேபோல், கோஷ்டத்தில், கருவறைக்குப் பின்பகுதியில் லிங்கோத்பவர் அல்லது பிரம்மா சிலாரூபமாக இருப்பார்கள். அதையடுத்து சண்டிகேஸ்வரரும் துர்கையும் சந்நிதியாகவோ கோஷ்டச் சுவரிலோ வீற்றிருப்பார்கள்.
சக்தி தெய்வங்களில் மிக வலிமையானவள் துர்காதேவி. செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் துர்காஷ்டகம் சொல்லி வழிபடுவது எதிர்மறை எண்ணங்களையெல்லாம் தூரஎறிந்து நம்மை மேன்மைப்படுத்தி விடுவாள். நம் வாழ்வில் இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளிவிடுவாள் துர்கை.
துர்கை வலிமைமிக்கவள். துஷ்ட சக்திகளை அழிக்க அவதாரமெடுத்தவள். அசுரக்கூட்டத்தை துவம்சம் செய்தவள். துர்கையைச் சரணடைந்தால், நம் முந்தைய ஜென்மப் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். கஷ்டங்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்பது ஐதீகம்.
துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.
ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே
ரட்சிணி ஸ்வாஹ;
என்கிற ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவோம். காலையும் மாலையும் சொல்லிவருவோம். காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி துர்கையின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் கடன் முதலான பிரச்சினையில் இருந்தும் சிக்கல்களில் இருந்தும் நமக்கு நிவர்த்தியைத் தந்திடுவாள் தேவி. கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கச் செய்வாள் துர்காதேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT