Last Updated : 09 Feb, 2021 04:38 PM

 

Published : 09 Feb 2021 04:38 PM
Last Updated : 09 Feb 2021 04:38 PM

அமாவாசை, பெளர்ணமி, சிவ வழிபாடு! 

அமாவாசையிலும் பெளர்ணமியிலும் சிவ வழிபாடு ரொம்பவே உகந்தது. அமாவாசையும் விசேஷம். பெளர்ணமியும் விசேஷம்.
இந்த நாட்களில், ஒவ்வொரு மாத அமாவாசை பெளர்ணமி என்பதில் உரிய மலர்கள் கொண்டு சிவ பூஜை செய்தால், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.

சித்திரை மாதத்தில் மரிக்கொழுந்து கொண்டு அமாவாசையிலும் பெளர்ணமியிலும் சிவபூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும். வைகாசி மாதத்தில் சந்தனம் கொண்டு சிவனாருக்கு அபிஷேகம் செய்தால் சகல துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். ஆனி மாதத்தில் முக்கனிகள் கொண்டு அபிஷேகம் செய்தும் நைவேத்தியம் செய்தும் வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்தும் மீளலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆடி மாதத்தில் பாலபிஷேகம் செய்து சிவலிங்கத் திருமேனியை தரிசித்துப் பிரார்த்தித்தால், வீட்டில் நிம்மதி பிறக்கும். ஆவணி மாதத்தில் நாட்டுச்சர்க்கரை கொண்டு நைவேத்தியம் செய்து சிவனாரை மனதார வழிபட்டால், கல்யாணத் தடைகள் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

புரட்டாசி மாதத்தில் அப்பம் கொண்டு நைவேத்தியம் செய்து ஈசனை வணங்கினால், சகல சம்பத்துகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஐப்பசி மாதத்தின் அமாவாசை மற்றும் பெளர்ணமிகளில் அன்னம் கொண்டு நைவேத்தியம் செய்வது விசேஷம். பெளர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வதும் தரிசிப்பதும் வீட்டில் தனம் தானியத்தைப் பெருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

கார்த்திகை மாதத்தின் அமாவாசை நாளிலும் பெளர்ணமி நாளிலும் தீபங்கள் கொண்டு அலங்கரித்து சிவ வழிபாடு செய்வதும் சிவ பூஜை செய்வதும், இல்லத்தில் இதுவரை இருந்த தீயசக்திகள் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும்.

மார்கழி மாத அமாவாசையிலும் பெளர்ணமியிலும் சிவனாரை வழிபடும் போது, நெய் தீபமேற்றி வணங்கினால், தொழிலில் மேன்மை நிச்சயம். உத்தியோகத்தில் உயர்வு உறுதி என்கிறார்கள். தை மாதத்தில் அமாவாசையிலும் பெளர்ணமியிலும் கருப்பஞ்சாறு அபிஷேகம் ரொம்பவே மகத்தானது. மங்கல காரியங்களைத் தந்தருளும்.

மாசி மாதத்தில் அமாவாசையிலும் பெளர்ணமியிலும் நெய் கொண்டு தீபமேற்றுவதும் நெய் தீபாராதனை செலுத்தி வேண்டுவதும் நல்ல எண்ணங்களை வளர்க்கும். பங்குனி மாத அமாவாசை நாளிலும் பெளர்ணமி நாளிலும் தயிர் கொண்டு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், நோய் நொடியில் இருந்து தப்பலாம். தீராத நோயும் தீரும். இல்லத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x